பக்கம்:எம். கே. டி. பாகவதர் கதை.pdf/78

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

75 ஆனாலும் மறுநாள் காலைப் பத்திரிகை களிலெல்லாம் 'நாடக மேடையில் கழுதை 1 என்ற தலைப்பில் அந்தச் செய்தி கொட்டை கொட்டையான எழுத்துக்களில் பிரசுரமாகித் தமிழ் நாட்டையே ஒருகலக்கு கலக்கி விடுகிறது. இந்தச் சண்டை இத்துடனாவது நின்றதா என்றால் அதுதான் இல்லை; வசனத்தில் வந்துவிடுகிறது. அங்கே அன்று கோவலன்' நாடகம். எம். கே. டி கோவலன்; எஸ். டி.எஸ் மாதவி. இம்முறை தகராறு பாட்டில் வரவில்லை; வசனத்தில் வந்துவிடுகிறது. கதைதான் உங்களுக்குத் தெரியுமே? - மாதவி நடனமாடிக் கொண்டே வீசி எறியும் மாலை கோவலனின் கழுத்தைத் தேடி வந்து விழுந்துவிடுகிறது. ஏற்கனவே தான் விதித்த நிபந்தனையின்படி, "என்னுடன் எழுந்து வாரும் என் துரையே, ' என்று மாதவி பாடிக்கொண்டே வந்து கோவலனின் கையைப் பிடித்து இழுக்கிறாள். 'எங்கு என்னை அழைக்கின்றாய், இயம்புமங்கையே?’ என்று கோவலனும் பாடிக்கொண்டே அவள் பிடித்த கையை உதறி விட்டுக் கேட்கிறான். இப்படியாக அவள் இழுக்க இவன் மறுக்க, அவள் இழுக்க இவன் மறுக்க, இருவருக்கு மிடையே ஆரம்பமான தர்க்கம் சூடு பிடித்ததும் பாட்டை முடித்துக்கொண்டு இருவரும் சுடச்சுட வசனம் பேசுவதில் இறங்கிவிடுகின்றனர். 'தாசியல்லவா நீ 'தா' என்றால் தந்தால்தான் தாசி', 'சி'என்றால் தராவிட்டால் சிச்சீ என்றல்லவா அர்த்தம்?" என்று சொல்லி, எஸ். டி. எஸ்., ஸைவேண்டுமென்றே வம்புக்கு இழுக்கிறார் எம்.கே.டி. கோபம் பொத்துக்கொண்டு வந்துவிடுகிறது எஸ்.டி. எஸ் ஸுக்கு; கம்பரைவிட நீர் கற்றறிந்தவரோ? அவர்