பக்கம்:எரிநட்சத்திரம்.pdf/11

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

 எளிநட்சத்திரம் 0 6

எளிநட்சத்திரம் 0 6 புதுக்கவிதை என்று இனம் பிரித்து எடுத்துக் கொள்ளத்தக்க பல கவிதைகள் தமிழின் பாவகைகளுக்குள்ளேயும், இனங்களுக்குள்ளேயும் வெகு லாவகமாக அடங்கி விடும் விசித்திரங்கள் கண்டுகொள்ளக் கூடியவையே.

வசனகவிதை அப்படியல்ல,

கவித்துவம் பொருந்திய வசனமே வசனகவிதை. ஆங்கிலத்தில் "Prose Poem" எனப்படுகிறது. நுட்பமான உணர்ச்சியும், சொல்லில் கவிதை வெளிச்சமும் இருப்பது போதும்; வசனத்தின் உருவத்தையும் கவிதையின் உள்ளடக்கத்தையும் கொண்டு பிறப்பதே 'வசனகவிதை' என்று என்.ஆர். தாசன் குறிப்பிட்டு வரையறை செய்வதை இங்கே நினைவு படுத்திக் கொள்ளலாம். உபநிடதங்களின் வசனகவிதைத் தன்மையும் நாடகப்பாணி, உரையாடல் போக்கிலான நேர் முகத்தன்மையும் மகாகவிகளான தாகூரையும், பாரதியையும் மிக ஆழமாகப் பாதித்தன என்பது நினைப்பதற்குரியவை. தாகூரின் கீதாஞ்சலி-யில் அமைந்துள்ள நேர்முகத் தன்மையும், பாரதியின் வசனகவிதைகளில் அமைந்துள்ள நேர்முகத் தன்மையும், வசனகவிதை அமைப்பின் வெற்றிக்குமிகச் சிறந்த உதாரணங்கள் எனலாம். மேலை நாட்டு உதாரணங்களாக மில்ட்டனும், சேக்ஸ்பியரும், வால்ட்விட்மனும் வருகிறார்கள். சோவியத் நாட்டின் மாயகாவ்ஸ்கியும் இந்த வரிசையில் நினைக்கப்பட வேண்டியவர். இவர்கள் மேற் கொண்ட 'ஊடகம்' நாம் விவாதிக்கும் வசனகவிதை (Prose Poem) Blank verse, Free verse என்று தீர்மானிப்பதில் சிக்கல்கள், தயக்கங்கள் இருக்கலாம். ஆனால் இவர்கள் செய்யுள் கவிஞர்களாக இல்லை என்பதும், அதன் காரணத்தனாலேயே மக்களை நெருங்கி வந்தனர் என்பதும் கவனத்துக்கு உரிய விஷயங்கள் ஆகும். மாயகாவ்ஸ்கியின் கவிதையைப் புதிய பாணிக் கவிதை என்று குறிப்பிடும் தொ. மு.சி ரகுநாதன், புதியபாணிக் கவிதை' நேர்முகமாக வாசகரோடு பேசும் தன்மை பெற்றுள்ளது. அதனாலேயே கேட்பவரின் இதயத்தில் நேரடியாகவே வந்து தைக்கும் வலிமையைப் பெற்று விடுகிறது என்று (லெனின் கவிதாஞ்சலி - முன்னுரை) சுட்டிக்காட்டுகிறார். மக்களுக்காகத்தான் இலக்கியம்-கவிதை என்றால், அந்த