பக்கம்:எரிநட்சத்திரம்.pdf/80

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

75 0 முருகுகந்தரம் காட்சி 11

இடம் : மேகலையின் வீடு நேரம் : மாலை

உறுப்பினர் : மேகலை, நம்பி

மேகலை கூடத்தில் அமர்ந்து ஒர் ஏட்டினைப் புரட்டிக் கொண்டிருக்கிறார், ஒலிப்பதிவம் இலால்குடிஜெயராமனின் வயலின் இசையை வழங்கிக் கொண்டிருக்கிறது. சின்னஞ் சிறுகிளியே' என்ற பாரதியின் பாடல் இராக மாலிகையில் அருவியாக, அலையாக மின்னல் வெட்டாகப் பொங்கிப் பாய்ந்து

கொண்டிருக்கிறது. இசையைச் சுவைத்த வண்ணம் நம்பி

உள்ளே வருகிறான். நம்பி;

வயலின் இசையில்

நான்

மெய்மறக்கும் பாடல் இரண்டு

ஒன்று இந்தப் பாடல்

மற்றொன்று

துன்பம் நேர்கையில்

யாழெடுத்து நீ

இன்பம் சேர்க்கமாட்டாயா

கண்ணே! என்ற

பாரதிதாசன் பாடல்,

அதைக்

குன்னக்குடிவைத்தியநாதன்

தேஷ் இராகத்தில்

வயலினில் மீட்டும்போது

கேட்பவர்கள்

தாங்களே

இசைக்கருவிகளாக மாறி

அப்பாடலே

தங்களை

மீட்டுவது போன்ற

உண்ர்ச்சியைப் பெறுவர்