பக்கம்:எல்லாம் தமிழ்.pdf/103

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

இலக்கிய ஆதாரங்கள்

95



      தெரிகோல் ஞமனன் போல ஒரு திறம்
      பற்றல் இலியரோ ! நிற்றிறம் சிறக்க !
      செய்வினைக் கெதிர்ந்த தெவ்வர் தேஎத்துக்
      கடற்படை குளிப்ப மண்டி அடர்ப்புகர்ச்
      சிறுகண் யானை செவ்விதின் ஏவிப்
      பாசவற் படப்பை ஆர்எயில் பலதந்து
      அவ்வெயிற் கொண்ட செய்வுறு நன்கலம்
       பரிசில் மாக்கட்கு வரிசையின் நல்கிப்
       பணியிய ரத்தைநின் குடையே, முனிவர்
       முக்கட் செல்வர் நகர்வலஞ் செயற்கே !
       இறைஞ்சுக பெருமநின் சென்னி, சிறந்த
       நான்மறை முனிவர் ஏந்துகை எதிரே!
       வாடுக இறைவதின் கண்ணி, ஒன்னார்
       நாடுசுடு கமழ்புகை எறித்த லானே !
       செலிய ரத்தைநின் வெகுளி, வாலிழை
       மங்கையர் துணித்த வாண்முகத் தெதிரே !
       ஆங்க, வென்றி எல்லாம் வென்றகத் தடக்கிய
       தண்டா ஈகைத் தகைமாண் குடுமி,
       தண்கதிர் மதியம் போலவும், தெறுசுடர்
       ஒண்கதிர் ஞாயிறு போலவும்
       மன்னிய பெருமநீ நிலமிசை யானே !

போரும் நீரும் :

ப. 44. பாண்டியன் நெடுஞ்செழியனே பாடியதாக வரும் புறநானூற்றுப் பாடல் (72) இங்குள்ள செய்திக்கு ஆதாரம்.
(திணை - காஞ்சி ; துறை - வஞ்சினக் காஞ்சி)

      நகுதக் கனரே நாடுமீக் கூறுநர்!
      இளையன் இவனென உளையக் கூறிப்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:எல்லாம்_தமிழ்.pdf/103&oldid=1530037" இலிருந்து மீள்விக்கப்பட்டது