பக்கம்:எல்லாம் தமிழ்.pdf/104

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

96

எல்லாம் தமிழ்



  படுமணி இரட்டும் பாவடிப் பணைத்தாள்
  நெடுநல் யானையுந் தேரும் மாவும்
  படையமை மறவரும் உடையம் யாமென்று
  உறுதுப் பஞ்சாது உடல்சினஞ் செருக்கிச்
  சிறுசொல் சொல்லிய சினங்கெழு வேந்தரை
  அருஞ்சமஞ் சிதையத் தாக்கி முரசமொடு
  ஒருங்ககப் படேஎ னாயின், பொருந்திய
  என்நிழல் வாழ்நர் செல்நிழற் காணாது,
  'கொடியன்எம் இறை' எனக் கண்ணீர் பரப்பிக்
  குடிபழி தூற்றுங்கோலேன் ஆகுக !
  ஓங்கிய சிறப்பின் உயர்ந்த கேள்வி
  மாங்குடி மருதன் தலைவ னாக
  உலகமொடு நிலைஇய பலர்புகழ் சிறப்பிற்
  புலவர் பாடாது வரைகஎன் நிலவரை !
  புரப்போர் புன்கண் கூர
  இரப்போர்க் கீயா இன்மையான் உறவே !


ப. 48. நெடுஞ்செழியனது போர்க்கோலம் கண்டு புலவர் பாடிய பாடல்கள் வருவாறு :

 கிண்கிணி களைந்தகால் ஒண்கழல் தொட்டுக்
 குடுமி களைந்தநுதல் வேம்பின் ஒண்தளிர்
 நெடுங்கொடி உழிஞைப் பவரொடு மிலைந்து
 குறுந்தொடி கழித்தகைச் சாபம் பற்றி
 நெடுந்தேர்க் கொடுஞ்சி பொலிய நின்றோன்
 யார்கொல்? வாழ்கஅவன் கண்ணி !

--புறநானூறு, 77, இடைக்குன்றுார் கிழார் பாடியது.

  ஒருவனை ஒருவன் அடுதலும் தொலைதலும்
  புதுவ தன்றிவ் வுலகத் தியற்கை :
  இன்றி னுாங்கோ கேளலம்: திரள் அரை
  மன்ற வேம்பின் மாச்சினை ஒண்டளிர்
  நெடுங்கொடி உழிஞைப் பவரொடு மிடைந்து

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:எல்லாம்_தமிழ்.pdf/104&oldid=1530036" இலிருந்து மீள்விக்கப்பட்டது