பக்கம்:எல்லாம் தமிழ்.pdf/16

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

எல்லாம் தமிழ்

8

”கைக்கு எட்டினதெல்லாம் வாய்க்கு எட்டுவதில்லை என்பது உனக்குத் தெரியாது போலும்!" என்று ஒருவன் ஏளனமாகப் பேசினான்.

அவள் மேலே பேசவில்லை. அன்று காலையில் ஆற்றுக்குப் புறப்படும்போது தாய் அழைத்ததும், ஆற்றில் ஒரு கோல் தடுத்ததும் அவள் நினைவுக்கு வந்தன. அவளுடன் இளமை தொடங்கிப் பழகின ஆறு இந்தப் பழியைச் சுமத்தவா அவளை அழைத்தது? அதற்குத் தான் அவ்வளவு விரைவாய் ஆற்றுக்கு வந்தாளா ? காவல் மரத்தின் பெருமையும் அருமையும் அவளுக்கு நன்றாகத் தெரியும். அவள் செய்தது குற்றமானால் அறிந்து செய்ததல்லவே! மாங்காய் இன்ன மரத்தைச் சார்ந்ததென்று தெரிந்துகொள்ள அடையாளம் ஒன்றும் இல்லையே! அப்படி இருக்க அதை எடுத்ததிலும் தின்றதிலும் என்ன பிழை இருக்கிறது? அவள் இப்படி என்ன என்னவோ சிந்தனையுள் ஆழ்ந்தாள். அவள் முகம் வாடியது. காவலரைப் பின்தொடர்ந்து நடந்தாள்.


நன்னன் காதில் செய்தி விழுந்தது. உள்ளது உள்ளபடியே விழவில்லை. ’காவல் மாமரத்துக் காயை ஒரு பெண் பறித்துத் தின்றாள்’ என்ற அளவிலே அவன் கேட்டான். ”பெண்ணா அத்தகைய அரக்கியும் இந்த நாட்டில் இருக்கிறாளா? பகைவர் அணுகுவதற்கு அரிய அந்த மரத்திலிருந்தா அவள் காயைப் பறித்தாள்? காவலர் என்ன செய்தனர்? தூங்கினர்களா?' என்று படபடத்துக் கேள்விமேல் கேள்வியை

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:எல்லாம்_தமிழ்.pdf/16&oldid=716589" இலிருந்து மீள்விக்கப்பட்டது