பக்கம்:எல்லாம் தமிழ்.pdf/77

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

அன்புப் பார்வை

69

 கவனித்துக் கொண்டிருந்த மன்னனிடம், அவ்வளவு கூர்மையாக மன்னர் பிரான் எளியேனைப் பார்ப்பது என்னைக் கூசச் செய்கிறது” என்றார் முதலியார்.

"இந்த ஆடையின் வரலாற்றைக் கேட்டோம். சிலந்தி வலை பின்னியது போல் இருக்கும் இது, உண்மையிலே சிறந்த துகில்தான். உங்கள் துடையில் சிலந்தி வந்ததாமே, சிலந்தியிருந்த இடத்தில் சிலந்தி நூல் போன்ற இது இருப்பது பொருத்தமாக இருக்கிறது. நல்ல வேளை சிலந்தி போய்விட்டதல்லவா?”

அமைச்சர் அரசனது சாதுரியத்தை அறிந்து மனத்துள் வியந்தனர்.

" சிலந்தியின் தொல்லை இன்னும் சிறிது இருக்கிறது" என்றார் முதலியார்.

"அடடா! அப்படியானால் ஏன் அவசரப்பட்டு இங்கே வரவேண்டும்? உங்கள் மேனிக்குத் துன்பம் உண்டாக்கும் அந்தச் சிலந்தியைப் பார்க்க வேண்டுமென்று தோன்றுகிறது. ஆனால் துடையில் அல்லவா இருக்கிறது?"

'என் தாய் கூறுவது போலல்லவா அரசர் பெருமான் அன்புரை இருக்கிறது? இத்தனை உள்ளன்புடையார் விருப்பத்தை நிறைவேற்றுவது என் கடமை."

அமைச்சர்களுக்கு ஒன்றும் விளங்கவில்லை. திடுக்கிட்டார்கள்.

"மன்னர் பிரானுடைய பார்வை பட்டால் கொஞ்ச நஞ்சம் இருக்கும் புண்ணும் ஆறிப்போகும்" என்றார் முதலியார்.

மன்னனுக்கே, ஏன் இப்படிச் சொன்னோம் என்ற சங்கடம் உட்டாகிவிட்டது.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:எல்லாம்_தமிழ்.pdf/77&oldid=1529512" இலிருந்து மீள்விக்கப்பட்டது