பக்கம்:எல்லாம் தமிழ்.pdf/78

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

70

எல்லாம் தமிழ்


"அரசர்பிரான் திருவுள்ளப்படியே அந்தப் புண்ணைக் கண்ணால் குளிர்ந்து பார்த்துப் போக்கட்டும்."

இவ்வாறு சொன்ன முதலியார் உடனே துடை யில் சிலந்தி இருந்த பக்கக்கைச் சிறிதளவு கிழித்தார். இரண்டு கைகளாலும் துயிலைப் பற்றி அந்தத் துவாரத்தின் வழியே, ஆறிவரும் புண் தெரியும்படிச் செய்தார். மன்னனுக்குத் தூக்கி வாரிப்போட்டது. புண்ணைக் கண்டல்ல. அத்தனை பொன் கொடுத்து வாங்கிய ஆடையை, மிகவும் அலட்சியமாகக் கிழித்துவிட்டதைக் கண்டு திடுக்கிட்டான். அமைச்சரும் பிறரும் ஒரே ஆச்சரியத்தில் மூழ்கினர்.

“என்ன, இதைக் கிழித்துவிட்டீர்களே!" என்றான் அரசன்.

"ஏன், மன்னர்பிரானுடைய தாயன்பு தழுவிய பார்வைக்கு இது எம்மாத்திரம்?"

"இவ்வளவு அருமையான வேலைப்பாடுடைய இது வீணாயிற்றே!" என்று இரங்கினான் சோழ வேந்தன்.

"இதைப்போல் ஆயிரம் வாங்கலாம்; மன்னர் பிரானுடைய அன்பை வாங்க முடியுமா?" என்றார் முதலியார்.

இந்த நிகழ்ச்சியை,

உள்ளற் கரிய துடையாடை கீறிய தொன்றுமொரு
வள்ளல் தகைமையொ டொத்துளதால்

என்று தொண்டை மண்டல சதகமும்,

தொடையில் எழுசிலந்தி தோற்றுவிக்கப் பட்டின்
புடைவை கிழித்த பெருங்கை

என்று திருக்கை வழக்கமும் பாராட்டுகின்றன.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:எல்லாம்_தமிழ்.pdf/78&oldid=1529513" இலிருந்து மீள்விக்கப்பட்டது