பக்கம்:எல்லாம் தமிழ்.pdf/94

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

86

எல்லாம் தமிழ்


தரிசனத்துக்கு வருகிறவர்கள் இந்தப் பேர்வழியைப் பார்த்து மனம் வருந்தினர்கள். அவரோடு தினமும் அவஸ்தைப்படும் கோயில் வேலைக்காரர்கள் பட்ட துன்பத்துக்கு முடிவே இல்லை. செந்திலாண்டவனிடம் ஆழ்ந்த பக்தி உடைய பரதேசிகள் சிலர் அந்தக் கோயில் வாசலில் இருந்து கிடைத்ததை உண்டு விட்டு, ஆண்டவன் தரிசனத்தை நாள்தோறும் தவறாமல் செய்துகொண்டு வாழ்ந்தார்கள். அவர்கள் பாடு திண்டாட்டமாய்விட்டது. அவர்களுக்குக் கடுமையான நிபந்தனைகளை விதித்தார். வருகின்ற அடியார்களும் கோயிலைச் சார்ந்து வாழ்பவர்களும் இந்த மானேஜரால் படும் சங்கடங்களைச் செந்திலாண்டவன் பார்த்துக் கொண்டிருந்தான். மேலதிகாரிகள் காதுக்கு விஷயம் எட்டினால் ஏதாவது பரிகாரம் கிடைக்கக் கூடும். அந்தக் காலத்தில் அவ்வளவு சுலபமாக அவர்களுக்குக் குறைகள் தெரிய வழியில்லை.

மானேஜரின் கடுமை ஒரு பக்கம் இருக்கட்டும். யோக்கியதை எப்படி? அது மகாமோசம். வருகிற வரும்படியைக் கொள்ளை அடிப்பது, பொய்க் கணக்கு எழுதுவது, நிவேதனங்களைக் குறைப்பது, படித்தரங்களைக் குறைப்பது, வீணாக அபராதம் விதிப்பது முதலிய காரியங்களையும் அவர் செய்து வந்தார். இந்த மகா பாபியையும் தெய்வம் பார்த்துக் கொண்டிருக்கிறதே !” என்று நல்லோர் வயிறு எரிந்தனர்.

அடியவர்களுக்கு உற்சாகம் இல்லை. திருட்டுத் தனமும் அதிகமாயிற்று. காணிக்கை குறைந்தது. வந்த காணிக்கை அவ்வளவும் கணக்குக்குப் போவதில்லை. உண்டியல் அடிக்கடி நிரம்புவது பழைய

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:எல்லாம்_தமிழ்.pdf/94&oldid=1529815" இலிருந்து மீள்விக்கப்பட்டது