22
எல்லோரும் இந்நாட்டு மன்னர்
வனஸ்பதி, துங்கபத்ரா தொழிற்சாலை, பேரார் சுவதேசி வணஸ்பதி, சர்க்கரை ஆலை யந்திர உற்பத்திச்சாலை ஓரியன்ட் காகிதத் தொழிற்சாலை, இவ்வளவும் வங்காளத்தில்,
- ஹைதராபாத்தில் சிர்பூர் காகித ஆலை.
- ஓரியன்ட் மின்சாரவிசிறித் தொழிற்சாலை கல்கத்தாவில்,
- பம்பாயில் ஹிண்ட் சைகல் தொழிற்சாலை.
- கல்கத்தாவில், இந்துஸ்தான் மோட்டார் தொழிற்சாலை,
- ஜெய்பூரில், தேசிய உருளைகள் தயாரிப்புத் தொழிற்சாலை.
- பம்பாயில், உருக்கு உலை.
கல்கத்தாவில், யந்திரச் சாமான்கள் தயாரிப்புத் தொழிற்சாலை; ரேடியோ, பிளாஸ்டிக் தொழிற்சாலைகள், மருந்து வகை தயாரிக்கும் தொழிற்சாலை, இவ்வளவும்.
போர்பந்தரில் சோடா உப்புத் தயாரிக்கும் தொழிற்சாலை.
தேடத்தேடத், தகவல்கள் நிறையக் கிடைக்கும், கிடைத்தது?
காங்கிரசாட்சி கனதனவான்களுக்குக் கரும்பாக இனிப்பதிலே வியப்பு என்ன?
இத்தனை, விதவிதமான தொழிற்சாலைகளை நடத்தும் பிர்லாவுக்கு, மூலதனம், வெளிநாட்டுக்கடன், வெளிநாட்டு யந்திரம், இவ்வளவும் தேவைப்படும் அளவுக்குக் கிடைக்கிறது; தொழில் தழைக்கிறது. காங்கிரசாட்சியின் துணையின்றி, எப்படி இப்படிப்பட்ட ‘ராஜ்யத்தை’ ஒரு பிர்லா அமைத்து, ஆண்டிட முடியும்.
காங்கிரசாட்சியின் துணை இவ்வளவுக்கும் தேவைப்படும்போது, தேர்தலிலே, காங்கிரசை வெற்றிபெறச் செய்வதிலே, பிர்லாவுக்கு அக்கரை எப்படி ஏற்படாமல் போகும்
அந்த அக்கரை கோடிகளாகின்றன! கோடிகள் இருப்பதால், கோணல் ஆட்சி நடாத்திடினும், மக்களை மயக்கி, மீண்டும் பீடம் ஏறக் காங்கிரஸ் கட்சியால் முடிகிறது.