உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:எல்லோரும் இந்நாட்டு மன்னர்.pdf/22

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

எல்லோரும்‌ இந்நாட்டு மன்னர்‌

23


குடி அரசு, மக்களின்‌ நலனைக்‌ காத்திடும்‌ அரசாகாமல்‌ இருக்கிறது என்றால்‌, தம்பி! காரணம்‌ இப்போது புரிகிறது அல்லவா?

பலப்பல கோடி ரூபாய்கள்‌, திட்டங்களின்‌ பெயரால்‌ செலவிடப்படுகின்றன; இதிலே, பெரும்பங்கு தனிப்பட்ட முதலாளிகளுக்குத்தான்‌ சேருகிறது: அவர்கள்‌ தொழில்கள்‌ வளர, இலாபம்‌ பெருக.

“முதல்‌ ஐந்தாண்டுத்‌ திட்டத்திலே, 233 கோடி ரூபாய்‌, தனியார்‌ துறைக்கு ஒதுக்கினீர்களே—இதிலே, பல தொழில்களை அமைத்துக்கொண்டு, ஏகபோக பாத்யதை கொண்டாடும்‌ 20 பெரிய தொழிலதிபர்‌களிடம்‌ போய்ச்‌ சேர்ந்தது எவ்வளவு தொகை? பரவலாகத்‌ தொழில்‌ வளரச்‌, சிறு முதலாளிகளுக்குச்‌ சேர்ந்‌தது எவ்வளவு தொகை?

இரண்டாவது ஐந்தாண்டுத்‌ திட்டத்திலே, தனியார்‌ துறைக்கு 570 கோடி ரூபாய்‌ ஒதுக்குகிறீர்களே, இதை எப்படிப்‌ பகிர்ந்தளிக்கப்‌ போகிறீர்‌கள்‌.

தொழில்‌ உலகில்‌, வல்லரசு அமைத்துக்‌ கொள்ளப்‌பெரிய முதலாளிகளால்‌ முடிகிறது! அதைத்‌ தடுத்து நிறுத்த உங்களால்‌ முடியவில்லை.

தொழிற்சாலை அதிபர்கள்‌, மேலும்‌ மேலும்‌ வலிவு அடைகிறார்கள்‌ ஆதிக்கம்‌ பெறுகிறார்கள்‌”

என்று அசோக்மேத்தா பாராளுமன்றத்திலேயே பேசினார்‌. பேசி? நான்‌ எப்போதாவது எடுத்துச்‌ சொன்னால்தான்‌ வெளியே தெரியுமே தவிர இந்துவும்‌, மெயிலும்‌, இன்ன பிற இதழ்களும்‌, இதனையா எழுதி மக்களுக்கு உண்மை நிலையைத்‌ தெரியச்‌ செய்திடும்‌! பத்திரிகைகள்‌ மட்டும்‌ என்ன—சூளைக்கல்லும்‌ பிடாரிதான்‌ என்ற பழமொழிப்படி தானே!

தம்பி! அரசு முறை, எவ்விதம்‌ இருப்பினும்‌, முடிஅரசு ஆகட்டும்‌, குடிஅரசு ஆகட்டும்‌, இங்கிலாந்தில்‌ உள்ளதுபோல குடிக்கோனாச்சி யாகட்டும்‌, முறை எவ்விதம்‌