24
எல்லோரும் இந்நாட்டு மன்னர்
இருப்பினும், தொழிலதிபர்களிடம் சிக்கிக்கொண்டால், தீர்ந்தது—ஆட்டிவைக்கிறபடி ஆடும், நீட்டிய இடத்தில் கையெழுத்திடும்!
குடிஅரசு முறையையும் வைத்துக் கொண்டு, சமுகத்திலேயும், தொழில் உலகிலேயும் ஆதிக்கக்காரர்களுக்குப்பிடி இருக்கும்படியும் அனுமதித்துவிட்டால், புத்தியுள்ள ஒரு மன்னனேகூடக், குடிஅரசுக் கோட்பாடு பேசும் அமைச்சர்களை ஆட்டிப்படைக்க முடியும்.
அடுத்து அப்படிப்பட்ட ஒரு மன்னனைக் காணலாம்.
“உழுதுண்டு வாழ்வாரே வாழ்வார், மற்றெல்
லாம் தொழுதுண்டு பின்செல்பவர்”என்ற செய்யுளை, வேறு எதற்காக இல்லையென்றாலும், செந்தமிழின் செம்மை கருதியேனும் இன்றும் பள்ளிகளில் பிள்ளைகள் படிக்கின்றார்கள் அல்லவா!
அந்த உழவனைச் சற்றுக் காண்போமா? கழகத் தோழர்கள் எடுத்தளிக்கும் படப்பிடிப்பு அல்ல; காங்கிரஸ் ஆட்சி அமைத்த குழுவினர் தருவது.
1956—57.ம் ஆண்டு, உழவுத் தொழிலில் ஈடுபட்டிருப்போர் நிலைகுறித்து, ஆய்ந்தறிந்து ஓர் அறிக்கை வெளியிட்டுள்ளனர். இதற்கு முன்பும் இதுபோன்றதோர் அறிக்கை வெளியிடப்பட்டது.
வேறு எந்தச் செயலிலே காட்டத் தவறினாலும். காங்கிரஸ் துரைத்தனம், பல்வேறு குழுக்கள் அமைப்பது, அறிக்கைகள் வெளியிடுவது, ஆய்வுரைகளைத் தருவது எனும் செயலிலே மட்டும் மிகமிகச் சுறுசுறுப்புக் காட்டுகிறது காங்கிரசார், ஆளவந்தார்களான பிறகு, வெளியிடப்பட்ட, அறிக்கைகளைக் குன்றெனக் குவித்துக் காட்டலாம்—அளவில் குன்று! பலன்? குடி அரசுத் துணைத் தலைவர், டாக்டர் இராதாகிருஷ்ணன், சின்னாட்களுக்கு முன்னம் ஆய்வுக் குழக்கள் அமைப்பிலே, அறிக்கைகள் வெளியிடுவதிலே, எனக்குத்