பக்கம்:எல்லோரும் வாழ்வோம்.pdf/100

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

I 02 தில்லை. தாயும் சளைப்பதில்லை. தன் சொந்த நலன் களையெல்லாம் குறைத்துக் கொண்டு, பலமுறை தன் வாயையும் வயிற்றையும் கட்டி, பிள்ளைகளை ஊட்டி வளர்ப்பது தாய். புதிய பாரதத்திற்குத் தாயாகத் தொண்டாற்ற வேண்டிய நாம், நம் சொந்த நலன் களைச் சிறிது சிறிதாகக் குறைத்துக் கொள்ள வேண்டும். இதிலும் அதிலும் செய்யும் செலவை, மெள்ள மெள்ளவாவது குறைத்துக் கொள்ள வேண்டும். ஒரு சமுதாயம் எந்த அளவிற்குத் தியாகஞ் செய்ய, சிக்கனப்படுத்த முன்வருகிறதோ அந்த அளவிற்கே, அச் சமுதாயத்தின் அடுத்த தலைமுறை முன்னேறும். தம் சுகத்தை விட்டுக் கொடுத்து மிச்சப்படுத்திய தாய், மிச்சப்படுத் தியதை என்ன செய்கிருர்? பதுக்கி வைப்பதில்லை, பிள்ளைகளின் வளர்ப்பிற்குச் செலவிடுகிரு.ர். அவற் றின் தேவைகளுக்குச் செலவிடுகிரு.ர். அதே போல் நீங்களும் நானும், நம் செலவுகளை, தள்ளிப்போட முடிந்த அளவு தள்ளிப்போட்டு, அப்படி மிச்சப் படுத்திய பொருளை, நாட்டின் வளர்ச்சிக்காகச் செலவிட வேண்டும். நம் குடும்பங்களைப் பலியிட்டு, நாட்டை வளர்க்கும் அளவிற்குத் தியாகிகளாகா விட்டாலும், நாட்டையும் வளர்த்து அதோடு நாமும் வளரும் அளவிற்காவது நாட்டுப் பற்றுடைய வர்களாக வேண்டும். அறிவுத் தெளிவுடையவர் களாக வேண்டும். இக் குழந்தை பையனகி, எனக்கு எவ்வளவு உதவுவான்? இக் குழந்தை பெண்ணுகி என்னைப் பேணுமா என்று உங்கள் தாயும் என் தாயும் எண்ணினர்களா? இலாபக் கணக்கை எண்ணி யிருந்தால் நாம் ஏது? இந்தச் சிந்தனை ஏது? இதைப் படிப்பது எங்கே? தாயின் கடமை உணர்ச்சி, இரத்தப் பாசம், சுமையைத் தாங்க, பத்தியம் காக்க, உணவைக் குறைக்க, அதே உடையைக்