பக்கம்:எல்லோரும் வாழ்வோம்.pdf/99

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

I 0.1 உடன் பிறந்தோரே! நல்லது. அடுத்துத் தேட வேண்டியதைக் கூறுகிறேன் கேளுங்கள் மணிகளே! தாயின் தியாகமே நம் உருவாகும். பத்து மாதம் சுமக்கத் தாய் உடன்படவில்லை என்ருல், நீயும் நானும் ஏது? பெற்ற தாயும் இதுவரை பட்டது போதும். இனியும் படமுடியாது துயரம். நான் காக்கமாட்டேன் பத்தியம். அவன் விட்ட வழியாகட்டும்' என்று கைவிட்டிருந்தால் நம்மில் எத்தனைபேர், சிசு மரணத்தைத் தப்பி இந்த நிலைக்கு வந்திருப்போம்? தாயின் பாடும், சுமையும் தியாகமுமே நம்மையெல்லாம் ஆளாக்கிவிட்டது தம்பி உன் நிலையும் அதுவே தங்காய்! இது நமக்கு வழிகாட்டட்டும். வரும் இளைய பாரதத்திற்கு நாம் தாயாக இருக்கவேண்டும். நல்ல பாரதத்தை உருவாக்கும் பொறுப்பை நாமே சுமக்க வேண்டும். யாரோ சுமப்பார்கள் என்று ஏமாந்து விடாதே. யாரோ சுமந்து பெற்ருல், யாருக்கோ சொந்தமாகிவிடும். வறுமையற்ற பாரதத்தை வளமிக்க பாரதத்தை வளமாக்க இத் தலைமுறையே தாயாகிப் பத்தியங் காக்கவேண்டும். கடும் பத்தியமும் காக்கவேண்டும் சிலவேளை. சுமையையும், பொறுப்பையும் தாங்கும் போக்கு வளரட்டும் நம்மிடையே. எத்தனை நேர்ந்தாலும் அத்தனைக்கும் ஊடே அடிவயிற்றிலே வைத்துப் பத்திரமாகப் பொறுப்பைக் காக்கும் போக்கைத் தேடிக்கொள்வோம் ஒளிபடைத்த கண்ணினேர்ே! சுமந்து பெற்று, பத்தியங் காத்து, பாலணுக்கி விட்டதும் தீர்ந்து விடவில்லை தாயின் கடமை. மேலும் தொடர்கிறது அவரது பொறுப்பு. பெற்ற பிள்ளை வாலிபனகி, காளையாகி, தன்காவில் தான் நின்று, தன்னையும் செழுங்கிளையையும் தாங்கும் நிலையை அடையும்வரை, தாயின் பொறுப்ப விலகவ