பக்கம்:எல்லோரும் வாழ்வோம்.pdf/98

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

புதிய போக்குத் தேவை என்னருமைத் தம்பி, தங்காய்! எல்லோரும் வாழ்வோம், நன்ருக வாழ்வோம், ஒன்ருக வாழ்வோம் என்ற பெருநோக்கு வந்து விட்டதா? மகிழ்ச்சி, எழுச்சி படையினரே; அந் நோக்கிலே ஊன்றி நில்லுங்கள், கணப் பொழுதும் தளராது நில்லுங்கள். நோக்கிலே சமதை வந்தபின் போக்கிலும் சமதை வேண்டும். எல்லோரையும் சமமாக மதி. அம்பலத்திலும் சமமாக மதி, அறையிலும் சமமாக மதி. சமமாக மதிப்பதுபோல் நடிக்காதே. அந் நோய் பெரியவர்களோடு நின்று விடட்டும்; நீயும் நானும் உண்மையாகவே எல்லோரையும் மனித்ர் களாக மதிக்கக் கற்றுக் கொள்வோம். உனக்கும் எனக்கும் பட்டம் இருக்கலாம். ஆல்ை அது இல்லா தவர்களே இழிவாதக் கருதக் கூடாது. அறிவு என்பது பட்டத்திலே இல்லே தம்பி பட்டம் ஏதுமில்லா வள்ளுவன் முன்னே, நீயும் நானும் எம்மர்த்திரம்! நெஞ்சையள்ளும் சிலப்பதிகாரத்தைத் தந்த இளங் கோவிற்காவது படிப்புச்சீட்டு உண்டா? அவன் அருகே நிற்க நம்மிலே எத்தனை பேர் அருகதை உடையவர்கள்? ஆகவே படிப்பு அகந்தையிலே வீழ்ந்து விடாதீர்கள். பிறப்பு அகந்தையும் ஆகாது ஐயா, ஆகாது. இந்தச் சாதி, அந்தச் சாதி என்கிற பேச்சையும் விடுங்கள். இந்தியச் சாதி என்ற போக்கை மேற்கொள்ளுங்கள். நான் என்னும் அகந்தைப் போக்கை விட்டுவிட்டு நாம் என்னும் சமத்துவப் போக்கை வளர்த்துக் கொண்டால், சிலர் மட்டுமல்ல, பலரும் பக்கத் துணையாவார். அது பாதி வெற்றி கிட்டியது போலாகும். பெருநோக்கிற்கேற்பப் பெ ரு ந் த ன் ைம யும் தேடிக்கொள்ள முடிவு செய்து கொண்டீர்களா