பக்கம்:எல்லோரும் வாழ்வோம்.pdf/103

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

105 விழாது. மரத்தையும் சூழ்நிலையையும் கட்டிக் கர்த்து வந்தால் அக் காய் கனியாகிவிடும். நன்ருகக் கனிந்ததும் யாரும் ஏறிப் பறிக்காவிட்டாலும், தானே கீழே விழுந்துவிடும் அம் மாங்கனி. சமுதாயத்தையும் பக்குவப் படுத்திவிட்டால், சமதைக்குப் பக்குவப் படுத்திவிட்டால், உச்சியிலே காத்திருக்கும் ஆதிக்கவாதிகளும் தாமே கனிந்து கீழே விழுந்துவிடுவார்கள். சமதையிலே நம்பிக்கையுடையோர் ப னி என்ன? சமுதாயத்தை அதற்குப் பக்குவப்படுத்து தல். நம் சமுதாயத்தைப் பிளவுபட்ட சமுதா யத்தை, மேடையிலேயே எல்லோரும் ஒர் குலம்’ என்று கூறிவிட்டு, வீட்டிலே 'என் குலம்’ என்று பிரித்துப் பேசும், நடிப்புப் போக்கிலே நலியும் நாம் சமுதாயத்தைச் சொல்லால், செயலால் பக்குவப் படுத்த முனைவோமாக. எறும்பூரக் கல்லும் தேயும். இளைஞர்களாகிய எறும்புகள் ஊர, சமுதாயக் கல்லும் தேயும். பேச்செல்லாம் சமதைக்காகப் பேசுவோமாக. எழுதுவதெல்லாம் சமதைக்காக எழுதுவோமாக. தொண்டெல்லாம் இவரையும் அவரையும் உயர்த்துவதில் வீனக்காமல் நாட்டை உயர்த்தப் பயன்படுவதாக. இன்றைய நிலை என்ன தம்பீ! தொண்டை நாட்டவரே வாரீர்” என்ருல், சான்ருேரே வருக என்று வாழ்த்துவர். பல்லவ நாட்டாரே! என்று அழைத்தால் நம் பல்லக்குத் துரக்கப் பலரும், படைபடையாகத் திரண்டோடி வருவர். அம் மனிதர்கள் தோளிலே நீங்களும் நானும் மமதையோடு பவனி வரலாம். பாண்டி நாட்டவரே வாரீர்” என்ருல் பழங்காலச் சிந்தனையோடு முடங்கிவிட்ட பலரும் பணத்தோடு