பக்கம்:எல்லோரும் வாழ்வோம்.pdf/104

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

I 0.6 வருவர் பாராட்ட சோழநாட்டுச் சோதரரே' என்றதும், சோழி அணிய சிலருக்கே உரிமையுண்டு என்ற காட்டுக்கால நினைப்பிற்கு மேலே வளராத சோழ நாட்டார் பலரும் கூடிப் போற்றிப் புகழ்க் களையோடும், கலையோடும் முன்வந்து நிற்பர். மக்களினத்தோரே வாரீர்! தொண்டு செய்ய வாரீர்! சாதிச் சேறு போக்க வாரீர்! சமய வெறிக் காய்ச்சல் தணிக்க வாரீர்! மொழி வலிப்பை நிறுத்த வாரீர்! வறுமை அகற்ற வாரீர்! வளம் பெருக்க வாரீர்! பகுத்துண்ண வாரீர்! சேர்ந்து வாழ வாரீர்! ஒர் நிலையாக வாழ வாரீர்!’ என்று குரல்_கொடுத் தால் பதில்குரல் கொடுக்க ஆள் இராது. இன்றைய நிலை இது! ஆம். இன்றைய நிலை இதுவே. இருந்தால் என்ன்? பல்லக்குப் பவனிக்காக, புகழுரைகளுக்காக, பண முடிப்பிற்காக உன்னை விற்காதே தம்பீ! நீயும் உன்ன்ை விற்க்ாதே தங்காய்! மானிடத்தை விற்க மாட்டேன், உடன் பிறந்தோரே! மறைந்து போனதைத் தோண்டி எடுத்து வைத்து அடுக்காக அளந்தால் மெய்மறந்துகேட்பர். கருத்திழந்து உருகுவர். மாருகப் பெறவேண்டிய ல்ையை, அதற்காகக் கொள்ள வேண்டிய நிலையை, அதற்காகக் கொள்ள வேண்டிய கருத்தைக் காட்டி ஞல், கல்லடி, சொல்லடி கிடைக்கும். அதற்காக அஞ்ச வேண்டாம். பதுங்க வேண்டாம். ஒதுங்க வேண்டாம். முன்னேடி பெறுவது குட்டும், திட்டும். மெய் யானுவிரைவான முன்னேடி பெறுவது ஆணியால் தியப்படுவது, குண்டடிபடுவது. அன மோகன தாசர், தம் சொந்தப் பிழைப்பைத் துறக்கத் துணியாதிருந்தால், தேசத் தந்தையாகி இருப்பாரா? தம் சொந்த சுகபோகங்களையெல்லாம்