பக்கம்:எல்லோரும் வாழ்வோம்.pdf/106

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பாரதம் வளர்க என்னருமைத் தம்பி, தங்காய்! இன்று சுதந்திர நாள். நாடெங்கும் விழா. ஊர்தோறும் கொண்டாட்டம். மனம்தோறும் மகிழ்ச்சி பொங்க வேண்டும். எதற்காக மகிழ்ச்சி? உரிமை பெற்றதற்காக மகிழ்ச்சி. தன்னட்சி உரிமை பெற்றதற்காக மகிழ்ச்சி. அன்னிய ஆட்சியி சிற்றரசுகளாகச் சிதறிக் கிடந்து, அன்னியருக்கு அடிமைப்பட்டு அவதிப்பட்டாலும், விழித்தெழுந்து போராடி இறுதியில் உரிமைப் போரில் வெற்றியும் பெற்று, உரிமைப் பாரதமாக மலர்ந்ததற்காக மகிழ்ச்சி அடையவேண்டும். உரிமைப் பாரதம் இனைந்த பாரதமாக மலர்ந்ததற்காக மகிழ்ச்சி அடைய வேண்டும். உரிமைப் பாரதத்தை இணைந்த பாரதமாக்கிய சிறப்பிற்காக மகிழ்ச்சி அடைய வேண்டும். இணைந்த உரிமைப் பாரதம் பிறவி மன்னர்களின் பிடியிலிருந்து விடுபட்டு உரிமைக் குடிமக்களின் 、?ssTGF「T&万。 காய்த்திருப்பதற்காக மகிழ்ச்சி கொள்ளுதல் பொருத்தம்; இயல்பு; முறை. ஆகவே ஆடுவோம், பள்ளுப் பாடுவோம், ஆனந்த சுதந்திரம் அடைந்த மகிழ்ச்சிப் பள்ளும் தேவை. அதோடு, அடுத்துச் செய்ய வேண்டியவற்றைக் காட்டும், உணர்த்தும் ஊக்கப் பாடல்களும் பாடுவோம். நம் தன்னாட்சி உரிமை பெற்றுப் பத்தொன்பது. ஆண்டுகள் நிறைகின்றன. பலப்பல ஆண்டு நிறைவு கிளேக் காணவேண்டும் தம்பீகளே, தங்கைகளே! கோட்ைசி நாட்டில் கோனும் அமைச்சும், தளபதியும், நாட்டுப் பற்ருேடும், வீரவுணர் வோடும், விழிப்போடும் இருந்தால் போதும். மற்ற வர்கள் தங்கள் தங்கள் வேலைகளிலேயே மூழ்கி