பக்கம்:எல்லோரும் வாழ்வோம்.pdf/107

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

109 விடலாம். குரல்கொடுக்கும்போது திரண்டு வந்தாற் போதும். துணிந்து போர் புரிந்தால் போதும். குடியாட்சிக்குச் சிலருடைய நாட்டுப் பற்று. மட்டும் போதாது. பலருடைய நாட்டுப் பற்றும் போதாது. மக்கள் அனைவருக்கும் நாட்டுப் பற்று வேண்டும். சிலருக்கோ, நாட்டுப்பற்று தான்ே ஊறும். பலருடைய நாட்டுப் பற்றையோ ஊட்டி வளர்க்கவேண்டும். மக்கள் அனைவருக்கும் நாட்டுப் புற்று வேரூன்ற வேண்டுமானல் முயன்று வளர்க்க வேண்டும். பல்லாண்டு முயன்று வளர்க்கவேண்டும். முள்ளும் புல்லும் எங்கெங்கோ முளைத்து விடுகின்றன. யாரும் விதைத்துப் பயிரிடா விட்டா லும், முளைத்துப் பரவி விடுகின்றன. நெல்லோ, எள்ளோ, எங்கெங்கோ முளைத்து, விளைந்து நமக் காகக் காத்துக் கொண்டிருப்பதில்லை. தேவைப் படும் அளவு நெல்லையும் எள்ளையும் நாமே பயிரிட்டுக் கொள்ளவேண்டும். இடமறிந்து, காலமறிந்து பயிரிட்டுக் கொள்ளவேண்டும். *-(1935), விதைத்து, நீர்ப்பாய்ச்சி, எருவிட்டுக் கட்டிக்காத்துப் பயிரிட்டுக் கொள்ளவேண்டும். 'தன் பெண்டு, தன் பிள்ளை, தன் சம்பாத்தியம் இவையுண்டு தானுண்டு என்னும் தன்னலம் அருகம்புல் போன்றது. பயிரிடாமலே முளைத்து விடுவது; எளிதில் முளைத்துவிடுவது. அது மட்டுமா? வேரிலே உயிரை வைத்துப் பிழைத்துக் கொண்டி ருப்பது எவ்வளவு காய்ந்தாலும், கருகி வாடி வதங்கினது போல் தோற்றமளித்தாலும், சில் மழைத்துளி பட்டதும் தளிர்த்துவிடுவது: பட்டுத் தளிர்த்துத்தொல்லை கொடுப்பது. பயிர்வளர, நன்கு விளைய புல்லைக் களைய வேண்டும். தேவைப்பட்டால் அடுத்தடுத்தும் களையவேண்டும்.