பக்கம்:எல்லோரும் வாழ்வோம்.pdf/109

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

1 11 ஒதுக்குவோமாக. பல நூற்ருண்டுகளாக வெட்ட வெட்ட முளைத்து முளைத்து, அங்கிங்கெளுதபடி எங்கும் காட்சியளித்த சப்பாத்தியை-கள்ளியை அழித்தோம். பல்லாண்டு தலைகாட்டாதபடி அழித் தோம். சாதிச் சாப்பாத்தியும் தேவையில்லாதது. நச்சுப் பிராணிகளின் உறைவிடம் ஆனது. ஆகவே என்சாதி, உன் சாதி என்கிற உணர்ச்சியும் நம் பெரியவர்களோடு பட்டுப்போக வேண்டும். அதற் கான பணியை அவர்களா செய்வார்கள்? நாமே செய்யவேண்டும். தொடர்ந்து செய்யவேண்டும். எல்லோரும் ஓர் இனம் எல்லோரும் ஒர் குலம்’ என்பது இலக்கியத்தில் மட்டும் உறைந்து விடாமல், மேடைய்ோடு மட்டும் நின்றுவிடாமல், எழுத்தோடு குந்திவிடாமல், வாழ்க்கையாகப் பூக்கும்வரை பாடு படுவோம் வாரீர்! மற்ருெரு நச்சுப் பூண்டு உண்டு. அது நச்சுப் பூண்டு மட்டுமன்று, அது ஒட்டுவார். ஒட்டியும் கூட. அது உண்டால் கொல்லும் தொட்டால் அரிக்கும்; இரத்தம் சிந்த அரிக்கும். இப்பூண்டையும் -ஒட்டுவர்ர்ெர்ட்டியையும்-மு ன்ளே யு ம் விட்டு வைக்கக்கூடாது. இதையும் செதுக்கி ஒதுக்க வேண்டும். இதன் வ்ேரிலே வெந்நீர் ஊற்றி அழிக்க வேண்டும். ப்ோதாதென்ருல் இரசாயன மருந்து போட்டு அழிக்க வேண்டும். அழிக்கப்பட வேண்டிய அந்த ஒட்டுவார் ஒட்டி எது? எங்கள் நாடு தொண்டை நாடு எங்கள் நாடு பல்லவ நாடு! எங்கள் நாடு பாண்டி நாடு எங்கள் நாடு சோழ நாடு! எங்கள் நாடு சேர நாடு எங்கள் நாடு கோசல நாடு! இத்தகைய பகுதிப் பாச உணர்ச்சிகள் இன்று தேவையில்லை. இவை தீங்கானவை. இவை ஒட்டுவாரொட்டி முன்னே காட்டிய இரு புல்களைவிட, இம்முள் பொல்லாதது,