பக்கம்:எல்லோரும் வாழ்வோம்.pdf/110

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

112 விடாதது. ஆகவே அவ்விரு புல்களைச் செதுக்கி ஒதுக்குவதிலே காட்டும் அக்கறையைவிட அதிக அக்கறையை இதைத் தோண்டி எறிவதிலே காட்ட வேண்டும். இதை அழிக்க அதிகப்படியான விழிப்பு வேண்டும். அதிக உழைப்பு வேண்டும். அதிக் உறுதி வேண்டும். அதிக ஆண்மை வேண்டும். ஒருவர் இறந்த பிறகு, குழைந்து நயந்து போற்றுவோம். சிறப்புச் செய்வோம். அவரே உயிரோடு வாழ்ந்தபோது, அல்லற்படுத்தி, மகிழ்ந் திருப்போம். அலட்சியப்படுத்திப் பூரித்திருப்போம். அவர்களது வழி வந்தோர் அல்லல்படுவதையும் காண மறுப்போம். சமாதிச் சிறப்பு நம் மரபு. வாழ்வோரைத் தாழ்த்துதல் நம் குறை. இக் குறை யைப் போக்குவோம். சமாதியான தொண்டை நாட்டையும் பல்லவ நாட்டையும் பாண்டி நாட்டை யும் சோழ சேர நாட்டையும் கோசல நாட்டையும் கல்வெட்டுகளிலும் செப்பேடுகளிலும், வரலாற்று நூல்களிலும் சமாதிகளிலும் சாந்திபெற விட்டு விட்டு, வாழும், வளரும் குடியரசு இந்தியாவைப் போற்றுவோம்; வளர்ப்போம்!