பக்கம்:எல்லோரும் வாழ்வோம்.pdf/111

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

முன்னே நோக்குவோம் என்னருமைத் தம்பி, தங்காய்! தொண்டை நாட்டையும், பல்லவ நாட்டையும், பாண்டி நாட்டையும், சோழ நாட்டையும், சேர நாட்டையும், கோசல நாட்டையும் சமாதிகளில் சாந்திபெற விட்டுவிடும்படி வேண்டியதை மறக்கா தீர். யாரையும் புண்படுத்த அன்று தம்பி இவ் வேண்டுகோள். மறைந்ததைத் தோண்டி எடுத்து வைத்துக்கொண்டு, ஊர்கூட்டி ஒப்பாரிவைப்பது நல்லதன்று. சமாதிகளே இழிவு படுத்த வேண்டாம். ஆனல் சமாதிகளைச் சிறப்புச் செய்வதிலேயே கால மெல்லாம் கழித்துவிடலாமா? பொருளையெல்லாம் இழந்து விடலாமா? அது அவர்களுக்கும் துணை யன்று, வாழ்விற்கும் வழியன்று. 'பழையன கழிதலும், புதியன புகுதலும் வழுவல கால வகையினனே'. இவ்வறிவுரையை நம் முன்னேர் யாருக்காக விட்டுச் சென்றனர்? நமக்கா? அன்னியருக்கா? தமிழிற்குரிய நாம், தமிழ் வழிவந்த நாம் இவ்வுரையைப் போற்ற வேண் டாவா? இதன்வழி நடக்கக் கடமைப்பட்டிருக்கி ருேம் தம்பிகளே! ஐம்பத்தாறு நாடுகள் கொண்டது பாரதம் என்பது பழையது. பண்டைக்காலக் கருத்து. பிற்காலத்திலே சிதறிப்போன கருத்து. ஐந்நூற்று அறுபதுக்கு மேற்பட்ட சிற்றரசுகளிடமும் ஆங்கி லேயனிடமும் அடிமைப்பட்டிருந்த பெரும் பரப்பு கொண்டது இந்தியா என்பதும் பழையது. மேற் கூறிய இரு கருத்துகளும் முற்காலத்திற்குச் சரி. இக் காலத்திற்குச் சரியன்று. இவையிரண்டுமே இக் காலத்திற்குப் பழையன. ஆகவே கழிய வேண் டியன: கழிக்கப்படவேண்டியன. எ. வா-8