பக்கம்:எல்லோரும் வாழ்வோம்.pdf/112

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

II & பழையன கழிந்தால் புதியன புகவேண்டாவா? வேண்டும். புக வேண்டியது எது? நாம் எல்லோரும் இந்தியர் என்னும் கருத்தே புகவேண்டியது. இதுவே காலத்திற்கு ஏற்றது. வலிவூட்டுவது. இண்ைத்த இந்தியாவைக் கண்ட பிறகு, சுதந்திரக் குடியாட்சி இந்தியாவைக் கண்ட பிறகு, கற்கால நினைப்பிலே, தேர்க்கால நினைப்பிலே, பல்லக்குக்கால நினைப் பிலே சருக்கிவிழலாமா? உடன் பிறந்தோரே! நீங்களும் நானும் இனியும் தொண்டை மண்டலத் தாருமல்ல, பாண்டிய மண்டலத்தாருமல்ல, புதிய பாரதப் புதல்வர்கள். நம் கண்கள் எங்கே உள்ளன? யாருக்காவது முகத்தின் பின்னே கண்கள் உண்டா? என்ருவது உண்டா? கண்கள் முன்னே அமைந்திருப்பதன் நோக்கம் என்ன? முன்னே பார்த்து, முன்னேற வேண்டும் என்பதே நோக்கம். அதை விட்டு விட்டு இயற்கைக்கு மாருக, வளர்ச்சிக்கு ஊருக, முன்னேற் றத்திற்குத் தடையாக, பின்னே பார்த்துக் கொண்டே பாழாக வேண்டாம். அடிக்கடி திரும் பிப் பார்த்துக் கொண்டும் அல்லற்பட வேண்டாம். பெருமூச்சு விடவேண்டாம். சென்றுபோன சிறப் பிலே சொக்கி நின்று, ஒட்டப் பந்தயத்தில் தோற் றுப்போன முயலாக வேண்டாம் நாம். தேவையில்லாத பழைய கருத்துகளை, தேய்த்து விடும் பண்டைக் கருத்துகளை, மோதவிடும் பகுதிப் பாசங்களை உதிர்த்துவிடக் கற்றுக்கொள்வோம். அவற்றிற்கு மாருக, காலத்திற்கேற்ற புத்தம்புதிய கருத்துகளை, ஒற்றுமைப்படுத்தும் கருத்துகளை, உயிரூட்டும் கருத்துக்களை விரைந்து ஏற்றுக்கொள் வோம். ஏற்ற உடனே நிலைபெற்று விடுவதல்ல. எந்தப் புதிய் கருத்தும், சென்ற காலச் சிந்தன. யெல்லாம் வந்து வந்து திசை திரும்பும், புதிய