பக்கம்:எல்லோரும் வாழ்வோம்.pdf/113

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

1 15 கருத்தைத் தழைக்க விடாதபடி தொல்லைப்படுத்தும். சாதிச்சிந்தனை, ஆதியில் இல்லாவிட்டாலும், பாதியில் வந்தாலும், பல நூற்ருண்டுகளாக நமக்கு வெறியூட்டி வருவது; அலைக்கழித்து வருவது. அம்மா கற்றுக் கொடுத்தது. அப்பா எருவிட்டு வளர்த்தது. அத்தை மெல்ல மெல்லச் சொல்லிச் சொல்லி வளர்த்தது. அக்கம் பக்கத்தார், அடுத் தடுத்து நினைவுபடுத்தித் தழைக்க வைத்தது. கான கக் காலத்துக் காவலுக்குப் போட்ட இவ்வேலி முள்ளை நாகரிகக் காலத்திலும் பருவத்திற்குப் பருவம் பயிரிடுவது அறியாமை, தீங்கு. ஆகவே இப் பயிரை அடியோடு கைவிட்டுவிடுவோம் உடன் பிறந்தோரே! சாதி வேற்றுமை எவ்வளவு பொருத்த மற் றதோ அவ்வளவு பொருத்தமற்றதே இருபதாம் நூற்ருண்டின் பிற்பகுதியில், பகுதிப் பாசத்தைப் பற்றிப் பல்லவி பாடுவதும். இதற்கும் நாம் ஏமாறக் கூடாது. சாதி நஞ்சிலே, பகுதிப்பற்று அழுக்கிலே வளர்ந்து விட்ட பெரியவர்களுக்காக, கோடானு கோடி இளைஞர்கள் தங்கள் எதிர்காலத்தை, மானி டத்தின் எதிர்காலத்தைச் சின்னபின்னப் படுத்தக் கூடாது. சென்றதினி மீளாது. ஆகவே வருவதைக் கவனிப்போம். பிணைக்கப்பட்ட பாரதம் எழுச்சி கொண்ட பாரதமாக, செழிப்பு கண்ட பாரதமாக, சமதை உணர்ச்சிகொண்ட பாரதமாக, நேர்மை வளரும் பாரதமாக, அனைவரும் வாழும் பாரதமாக உருவாவதற்கு நம்மாலான தொண்டினை இன்றும் செய்வோம்; என்றும் செய்வோம். வளர்க பாரதம்; வாழ்க வையகம்.