பக்கம்:எல்லோரும் வாழ்வோம்.pdf/114

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

நவம்பர் பதிலுை நவம்பர் பதினன்காம் நாள்: நவபாரதத்தின் பெருநாள்; பொன்ள்ை, திருநாள்! அந்த நாளைப் பாரதம் முழுதும் கொண்டாடுகிறது. அன்று இமயத் தில் கொண்டாட்டம், குமரி முனையில் கொண்டாட் டம். ஏன் இக் கொண்டாட்டம்? அந் நன்ள்ை, நேருவின் பிறந்த நாள், ஜவகர் லால் நேருவின் பிறந்த நாள். செல்வத்திலே பிறந்து, வளத்திலே வளர்ந்த பெருமகளுரின் பிறந்த நாள் என்பதற்கா கொன் டாடுகிருேம்? இல்லை. இக் காரணம் பற்றி கொண் டாடுவதாயின், உற்ருர் உறவினர், வேண்டிய பெருங்குடியினர் மட்டுமே கொண்டாடுவர். நாடு முழுவதும் கொண்டாடாது. அறிவு மேதை என்பதற்காகக் கொண்டாடு வதாயின், கல்விக் கழகங்களோடு நின்றிருக்கும் கொண்டாட்டம். ஜவகர்லால் நேரு செல்வக் குடியில் பிறந்தவர்; உண்மை. அறிவு மேதை உண்மை. அவர் மனிதர்; நல்ல மனிதர்; சிறந்த மனிதர்; தலைசிறந்த மனிதருள் மாணிக்கம். ஆம்; இதுவும் உண்மை. இது அவரது தனிச் சிறப்பு. - சிறப்புகளின் சிகரமாக விளங்கிய நேரு எங்கோ யாருக்கும் எட்டாத உச்சியில் வீற்றிருந்து ஒளிவீச வில்லை. மாருக மக்களோடு ஒருவராக வாழ்ந்தார். எளிய மக்களோடு மீண்டும் மீண்டும் உறவாடினர்; ஒளி கொடுத்தார்; வழிகாட்டினர். நாற்பது ஆண்டு களாக நாடு முழுவதும் சுழன்று சுழன்று மக்களின் நிலையை உணர்ந்தார்; உருகினர்; அவர்களுக்காக உருகினர். வீட்டிலும் சரி, நாட்டிலும் சரி, அவர் சிந்தையெல்லாம், சீந்துவாரற்ற தரித்திர நாராய