பக்கம்:எல்லோரும் வாழ்வோம்.pdf/115

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

1 I 7 னர்களைப் பற்றியே. தன்னை மறந்து, மக்களை நினைத்து வாழ்ந்தார்: உழைத்தார்; அவர்களுக்கா கவே கடைசி வரை உழைத்தார். உங்கள் நேருவும் எங்கள் கென்னடியும் அரசியல் கட்சிப் பெரியவர்களாக இருந்ததும், நாட்டை ஆளுவோர்களாக இருந்ததும் உண்மை. ஆனல் அவர்கள் வெறும் கட்சிப் பெரியவர்கள் அல்லர். தனிநாடுகளின் பெரும் பதவியாளர்கள் மட்டுமல் லர். அவர்கள் இருவரும் மனித குலத்தின் காவலர் கள். மனித குலம் முழுமைக்கும் குரல் கொடுத்த வர்கள். மனித குலம் முழுமைக்கும் உழைத்தவர் கள். இப்படி அமெரிக்காவில் கார் ஒட்டிகளெல் லாம் என்னிடம் ஐந்தாண்டுகளுக்கு முன் எடை போட்டது இன்றும் பசுமையாக இருக்கிறது. ஆம்! நேருவின் கண்ணோட்டம், உலகக் கண்ணோட்டம்; மனித குலக் கண்ணோட்டம். உலகோடு இணைந்த நாடாகவே, விடுதலை இந்தியாவைக் கண்டார்! இந்தியர்களின் விடுதலை யையும், மனித குலத்தின் ஒரு பகுதி மக்களின் விடுதலையாகவே கண்டார் நேரு. இந்திய விடுதலைக்கு அவர் பட்டபாடு எவரே பட்டார்? சுகபோகங்க யெல்லாம் சுவைக்கும் பருவத்தில், சுவைக்கும் வாய்ப்புகள் நிறைந்திருந்தும், அத்தனையையும் ஒதுக்கி விட்டு, மீண்டும் மீண்டும் சிறை சென்று ஒன்பதாண்டு சிறைவாழ்க்கையை அனுபவித்து விடுதலையைப் பெற்றுத் தந்தார். அடிமைத்தனம் அழிய வேண்டும்; சமூக விடுதலை ஓங்க வேண்டும். ஏற்றதாழ்வு விலகவேண்டும். வேற்றுமையுணர்ச்சி பட்டுப்போக வேண்டும். ஒற்றுமை வளரவேண்டும். எல்லோரும் ஒர் குலம், எல்லோரும் ஓரினம்’ என்ற உணர்ச்சி தழைக்க வேண்டும். நாட்டால் இந்திய ராக, இனத்தால் மனிதராக வாழும் பெருவாழ்வை