பக்கம்:எல்லோரும் வாழ்வோம்.pdf/118

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

குலப் பெருமை என்னருமைத் தம்பி, தங்காய்! இன்று என் சிந்தனை, இருபத்து ஏழு ஆண்டு களைக் கடந்து செல்கிறது. அன்று சீகாகுளம் என்னும் நகரத்தில் இருந்தேன். அப்போது வட விசாகப்பட்டினம் மாவட்டத்தின் கல்வி அதிகாரி யாக இருந்தேன். அப்போது ஒரு நாள் காலை, கடைநிலை ஊழியர் ஒருவர் வந்தார். அவர் கையிலே தாம்பாளம். அதில் இவற்றிலேப் பாக்கு, வாழைப்பழம், பூ, மஞ்சள் இத்தனையும் இருந்தன. அச்சிட்ட அழைப்பிதழ் ஒன்றும் அவற்றின் மேல் இருந்தது. அவ்வூழியர் பணிவான இயல்பினர். என்னை வணங்கி, கொண்டு வந்ததை என்னிடம் கொடுத்தார். அழைப்பிதழை எடுத்துப் பார்த்தேன். அது தெலுங்கில் இருந்தது. என் மனைவியை அழைத்து அதைக் கொடுத்தேன். அவர் வாங்கிப் படித்தார். ஊழியரின் தலைமகனுக் குக் காதணி விழா. அதற்கான அழைப்பு அது என்று விளக்கினர். ஊழியரோடு தெலுங்கில் பேசினர். சில தகவல்களைக் கேட்டறிந்தார். தமிழ்ப் படுத்தினர், சுருக்கம் இதோ. என் ஊழியர் அரச குடும்பத்தைச் சேர்ந்தவர். அந்த அரச குடும்பம் அப்போது ஆட்சியிலே இல்லை. ஆயினும் செல்வத்திலும் செல்வாக்கிலும் இருந்தது. அக் குடும்பத்தின் பெயரை அவர் கூறினர். அவர்கள் இன்றும் நல்ல நிலையில் உள்ளனர். ஆகவே அக் குடும்பப் பெயரையும் ஊழியர் பெயரையும் நான் வேண்டுமென்றே மறைக்கிறேன். தம்பீ! வேலை சிறியதுதான். குலத்திலோ அவர் பெரியவர். குலப் பெருமையைக் காக்க வேண்டியது அவரது கடமையாம். தலைமகனுக்குத் தக்கபடி. காதணி விழா நடத்துவது குலப் பெருமையைக்