பக்கம்:எல்லோரும் வாழ்வோம்.pdf/12

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

14 நடப்பாக இருக்கட்டும்._இம்_முடிந்த முடிவிற்கு வந்துவிட்டீர்களா? வரவேற்கிறேன்; பின்பற்று கிறேன். - 'தம்பி வழிகாட்ட, அண்ணன் பின்பற்ற! கேலியா செய்கிறீர்கள் அண்ணு?’ என்று திக்ைத்து நிற்காதீர்கள். மெய்யாகவே சொல்லுகிறேன். தம்பியோட்டும் ஈருருளியின் பி ன் ன ல் அண்ணன் ஏறி உட்கார்ந்து பயணஞ் செய்வ தில்லையா? தம்பியோட்டும் பேருந்து வண்டியின் பின்னல் அண்ணன் அமர்ந்து செல்வதில்லையா? அது தவரு? கேலியா? அண்ணன் ஐந்தடி தம்பியும் அதே மட்டத் தில் தேங்கிவிட வேண்டுமா? உள்ளது சிறத்தல் அல்லவா இயற்கை? அதுவன்ருே வாழும் வழி? 'உள்ளதே உயர்ந்தது; அதுவே சிறந்தது; அதற்கு மேல் வேறெது என்பது தேக்க வழியல்லவா? தேய்வு வழியுமல்லவா? - - தேக்கவழி வேண்டா, தேய்வுவழி வேண்டா, உள்ளது சிறக்கச் சிந்திப்போம். உள்ளது உயர உழைப்போம். நல்லதை நாடிப் பாடுவோம், வாருங்கள். மக்களாகப் பிறந்து, ஆனால் மொழிகளை வெறுப்பவர்களாக வெம்பி வீழ்ந்து, நிறவெறிப் பிஞ்சுகளாக உதிர்ந்து, பாழாகும் மக்களைப் பற்றிச் சிந்திக்க வேண்டாவா? அவர்கள் மக்களாகக் கனி வதற்கான வழிவகைகளைக் காணவேண்டாவா? அவைகளைக் கையாண்டு விளக்க வேண்டாவா? அதற்கு நிலைகளை உருவாக்க வேண்டாவா? அதற் கேற்ற பணிகளை ஆற்றவேண்டாவா? i - அடேயப்பா, சித்தர்களால் ஆகாதது; புத்த ரால் ஆகாதது: என்னலா ஆகும்? இதுவா உங்கள். மலைப்பு?