பக்கம்:எல்லோரும் வாழ்வோம்.pdf/120

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

I 2.2 பல்லைக் கடித்துக்கொண்டு இருந்துவிட்டேன்; இன்றும்தான் இருக்கிறேன். வீட்டுவிழா,_ஊர்விழா-இவை எண்ணிறந் தன_நம் நாட்டிலே. இவை விழுங்கும் செல்வமும் மலைபோன்றது நம் நாட்டிலே. திருமணமென்றும், தீபாவளியென்றும் செலவிட்டுச் செலவிட்டு அள விற்குமேல் செலவிட்டுத் தீபாவளியானது இந்தியச் சமுதாயம். பண்டைப் பழக்கமன்று, சிறுசிறு நிகழ்ச்சி களுக்கெல்லாம் பெரும்பெரும் பொருளை இறைத்து விட்டு ஏங்குவது நம் சமுதாயம். திருவிழாவென்றும் சடங்கென்றும் உள்ளதை எல்லாம் வேட்டு விட்டு' விட்டு கையைப் பிசைவது நம் சமுதாயம். இத்தனை யிலும் தப்பி, ஏதோ சிறிது வெள்ளையாகவோ, கறுப்பாகவோ சேர்த்து வைத்தால் அதையும் பண்ணையிலோ, ஆலையிலோ, தொழிற்சாலையில்ோ முதலீடு செய்யாமல் வெள்ளியிலும் பொன்னிலும் முடக்கிவிடுவது: ஆகவே பொருளாதாரத்தில் முடங்கி விடுவது நம் சமுதாயம். இவையே நம் மக்களின் பொருளாதாரக் கீழ் நிலைக்குக் காரணம். இவற்றின் தொல்லையில்ை, சாண் ஏறினல் முழஞ் சறுக்கி விடுகிறது. இத் தீமைகளைக் களைந்தால் வீடும் நாடும் வளமுறும். இது என் தனிப்பட்ட கருத்தன்று: கண்டு பிடிப்புமன்று தம்பீ! இந்தியப் பொருளாதாரத்தைப் பற்றி அறிந்த ஆண்மையாளரின் ஆணித்தரமான முடிவு இது. இன்று நேற்றைய முடிவன்று. பல்லாண்டுகளாகப் பொருளாதாரப் பாடம் படிப்போர் சொல்லிவரும் முடிவு. இதைப் படித்தால் போதுமா? நினைவில் வைத்திருந்து, நன்ருக எழுதி, பரீட்சை தேறினல் போதுமா? வாழ்க்கைக்குப் பயன்படுத்த வேண் ц_гт6uгт?