பக்கம்:எல்லோரும் வாழ்வோம்.pdf/121

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

123 'கற்றபடி நிற்க, அவர் என்று ஒவ்வொரு வரும் தன் தன் பொறுப்பைத் தட்டிக் கழிக்க லாமா? பழையன கழிதலும் புதியன புகுதலும் வழுவல. * ஆகாறு அளவிட்டதாயினும் கேடில்லை போகாறு அகலாக் கடை. இது பொய்யா மொழி. வீட்டிற்கும் பொய்யா மொழி. நாட்டிற்கும் பொய்யா மொழி. இதைச் சிக்கெனப் பற்றுவீர். சிக்கனமாக வாழ்விர்! கொண்டாட்டச் செலவுகள் குறையட்டும். திண் டாட்ட நிலைகள் மாறட்டும். பூட்டி வைப்பது மாறட்டும். சுமந்து திரிவது குறையட்டும். வங்கி யிலே போட்டு வைப்பது வளரட்டும். மற்றவர் கிடக்கட்டும் தம்பி! நீ, நில்! நிமிர்ந்து நில், துணிந்து நில், தீமையை நீக்கிவிடத்_துணிந்து நில். புது வழிகாட்டத் துணிந்து நட. திருமணம் முதலிய நிகழ்ச்சிச் செலவுகளைக் குறைப்பது என்று உறுதிகொள். அப்படியே செய்துகாட்டு. ஊரார் துற்றட்டும். அதுவொன்றே அவர்கள் செய்யக் கூடியது. முதியவர்கள் முணுமுணுக்கட்டும். அவர் கள் பொழுதும் போகவேண்டுமே!