பக்கம்:எல்லோரும் வாழ்வோம்.pdf/122

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

உயர்த்திடுவீர்! உயர்ந்திடுவீர்! என்னருமைத் தம்பி, தங்காய்! இன்று டிசம்பர் பதினேராம் நாள். இது பிறந்தநாள். யார் பிறந்த நாள்? பாரதி பிறந்த நாள். எந்த பாரதி? தேசியக் கவி சுப்ரமன்ரிய பாரதி. அதோ, அவரது பொலிவான தோற்றம் காண் கிறேன். விடுதலைக் கனல் கக்கும் கண்களைப் பார்க்கிறேன். அவரது கபடமற்ற நேரிய பார் வையை நோக்குகிறேன். அச்சம் தவிர்க்கிறேன். ஆண்மை கொள்கிறேன். சிந்தனை சிறகடித்துச் செல்கிறது. பின்ளுேக்கிப் பறக்கிறது. முப்பந்தைந்து ஆண்டுகளுக்கு முந்திய மாலைப்பொழுது, திருவல்லிக்கேணி கடற்கரை. மாநிலக் கல்லூரிக்கு முன்பிருக்கும் மணல் வெளி. திலகர் கட்டத்தில் கூட்டமொன்று நடக்கிறது. பெருங்கூட்டமில்லை. சாதாரண கூட்டம். ஒலி பெருக்கி உண்டா? இல்லை. ஆயினும் என்? கணிரென்று பாட்டொன்று கேட்கிறது சொல் முறியாத பாட்டு வருகிறது. காற்ருேடு கலந்து, ஆனல் தெளிவாக, எடுப்பாக வருகிறது. அப் பாட்டு எங்களை ஈர்க்கிறது. நானும் என்னுடன் இருந்த நண்பர்களும் பாட்டு வரும் பக்கம் நடக் கிருேம். நடைபாதையை விட்டு நகர்ந்து கூட்டத் திற்கு வந்துவிட்டோம். கட்டான உடல். கருநிறம். வெண்கலத் தொண்டை. இத்தனையும் உடைய ஒருவர் பாடு கிருர், கேட்டோரெல்லாம் வீறு கொள்ளுகின்றனர். உறுதி கொள்ளுகின்றனர். இதோ அந்தப் பாட்டு; ாரதிப்பாட்டு.