பக்கம்:எல்லோரும் வாழ்வோம்.pdf/123

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

125 இதந்தரு மனையினிங்கி இடர்மிகு சிறைப்பட்டாலும் பதந்திரு இரண்டுமாறி, பழிமிகுந்து இழிவுற்றலும் விதந்தரு கோடி இன்னல் விளைந்தெனை அழித்திட்டாலும் சுதந்திரத்தேவி, நின்னைத் தொழு திடல் மறக்கிலேனே நின்னருள் பெற்றி லாதார் . . . . . . . . நிகரிலாச் செல்வரேனும் பன்னரும் கல்வி கேள்வி படைத்துயர்ந்திட்டாரேனும் பின்னரும் எண்ணிலாத பெருமையிற் சிறந்தாரேனும் அன்னவர் வாழ்க்கை பாழாம் அணிகள்வேய் பிணத்தோடொப்பார்! என்று முழுப்பாட்டையும்_பாடி முடிக்கிருர். கைக ளெல்லாம் கொட்டின. நெடுநேரம் கொட்டின. நொடிப் பொழுது அமைதி. மீண்டும் விடுதலை முழக்கம் அவரே பாடினர். என்ன பாடினர்? விடுதலை, விடுதலை’ என்னும் பாடலை முழங் கினர். திறவைகொண்ட தீமையற்ற தொழிற் புரிந்து யாவரும் தேர்ந்த கல்வி ஞானம் எய்தி வாழ்வோம் இந்த நாட்டிலே! விடுதலை, விடுதலை, விடுதலை’. "தாதரென்ற நிலைமை மாறி ஆண்களோடு பெண்களும் சரிநிகர் சமானமாக வாழ்வோமிந்த நாட்டில்ே. விடுதலை, விடுதலை, விடுதலை.” விடுதலை முழக்கப் பாட்டைக் கேட்ட கூட்டத் தினர் அனைவரும் எழுச்சி பெற்றனர். அவ்வெழுச்சி, பின்னர் அச்சித்தால் அடங்கிவிடக் கூடாதென்று எண்ணினர் போலும். மீண்டுமொரு பாடலைப் பாடினர் அவரே.