பக்கம்:எல்லோரும் வாழ்வோம்.pdf/124

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

126 'அச்சமில்லை அச்சமில்லை, அச்சமென்பதில் லேயே’ என்ற பாட்டை முழுவதும் பாடி (Մւգ-55որi அவர். அதன் அடிகளைக் கேட்கக் கேட்க, 'ஆம் ஆம்’ என்றன எங்கள் உள்ளங்கள். சரி சரி: என்று ஆடின எங்கள் தலைகள். கொட்டி, ஒப்புக் கொன் டன எங்கள் கைகள். பாட்டுக்குப் பாட்டு இடைவேளை இரண்டொரு விளுடிகள். அந்த இடைவேளைகளில் கைகொட்டி எங்கள் ஆதரவைக் காட்டினுேம் நாங்கள். மேலும் சில தேசிய கீதங்கள் முழங்கின. 'வாழில் முப்பதுகோடி முழுமையும் வாழ்வோம் விழில் முப்பதுகோடி முழுமையும் வீழ்வோம்: என்று குளுரைக்கும் பாரதப் பொதுமைப் பாட லோடு முடிந்தது இசை முழக்கம். கடலொலியென ஒலித்தது கையொலி. பாரதி நூல்கள் பறிமுதல் செய்யப்பட்டிருந்த காலம் அது. பாரதிப் பாட்டைப் பாடினுல் குற்றம். ஏன் என்ருல் சிறைவாசம், அந் நிலையிலே பார்திப் பாடல் ஒன்றையல்ல, பலவற்றைத் துணிந்து பாடு கிருர் ஒருவர். கூடிக் கேட்டுப் பாராட்டுகின்றனர் LGυπί. இத்தனே பாராட்டுகளையும் பெற்றுக்கொண்ட இவர் யாரோ, என்ன பேரோ என்று அறிய விரும்பினுேம். பூரீமான் ஜீவானந்தம் என்று கூறினர் பெரியவர் ஒருவர். அவ்ரே பின்னர் தமிழ் நாட்டுப் பொது உடைமைக் கட்சித் தலைவர்களுள் ஒருவரான, மறைந்த தோழர் ஜீவானந்தம் ஆவார். பாரதி பாடல்களைக் கேட்டு, சுதந்திர ஆர்வம் கொண்டிருந்த கூட்டத்தின் முன்னர் எழுந்து நின்ருர் ஒருவர். அவர் இடுப்பிலே தூய வெள்