பக்கம்:எல்லோரும் வாழ்வோம்.pdf/126

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

i 28 கேட்டது திரு. வி. கல்யாணசுந்தரனரின் சொற் பொழிவையே. தம்பிகளே! தங்கைகளே! இவர்கள் யாரையும் நீங்கள் இன்று பார்க்க முடியாது கேட்க முடியாது. அவர்கள் எழுத்தையாவது படிக்க வேண்டாவா? பாட்டையாவது படிக்க வேண்டாவா? வாழ்க்கை யையாவது அறிய வேண்டாவிா? அவர்களை காப்பி அடிக்க அல்ல. அவர்களைப் போல், அகன்ற அறிவுபெற, ஆழ்ந்த கல்விபெற, அஞ்சா நெஞ்சம்பெற, தன்னலமற்ற பொது நல உணர்ச்சி பெற, புதுவழி, நல்ல வழி நடக்க, உள்ளது சிறக்க எதையும் எதிர்பாராது, கொள் கைக்காகப் பம்பரம் போன்று சுழன்று சுழன்று பாடுபட்டால் அல்லவா தலைமுறைக்குத் தலைமுறை முன்னேற்றம், வளர்ச்சி கிட்டும்? எனவே பாரதியைப் படியுங்கள். தமிழ்த் தென்றலைத் தேடிப் படியுங்கள். ஜீவாவின் எழுத்து களைத் தேடிப் படியுங்கள். பிற நாட்டு நல்லறிஞர் சாத்திரங்களைப் படியுங்கள். எழுச்சி கொள்ளுங்கள். ஆர்வம் பெறுங்கள். சென்றிடுவீர் எட்டுத் திக்கும். கலைச் செல் வங்கள் யாவும் கொணர்ந்திங்குச் சேர்ப்பீர். பயிற்றிப் பல கல்வி தந்து பாரை உயர்த்திடுவீர். நீவிரும் உயர்ந்திடுவீர்.