பக்கம்:எல்லோரும் வாழ்வோம்.pdf/127

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

வாழ்வளிக்கும் கல்வி கல்வி, கண் அளிக்கும். கல்வி, வழிகாட்டும். வாழும் வழி காட்டும் கல்வி, ஆளாக்கும்; ஆற்றல் மிக்க ஆளாக்கும்; அறிவுடைய ஆளாக்கும்; சீலமுடைய ஆளாக்கும்: அவையத்து முந்தி இருக் கும் ஆளாக்கும். எனவே கல்வி தேவை. எல்லோர்க் கும் தேவை; என்றென்றும் தேவை. மனிதப் பிறப்புரிமைகளில் ஒன்று கல்வி. அடிப் படை உரிமை கல்வி. அது எல்லோர்க்கும் எட்ட வேண்டும். இவ்வுரிமைக்குக் குறுக்கே வறுமை வரக்கூடாது. T இன வேற்றுமை இடையூருகக் கூடாது. மொழியும் வழிமறிக்கக் கூடாது. எங்கே பிறப்பினும் ள்க்குடிப் பிறப்பினும், எம்மொழி ப்ேசினும் கல்வி, பட்டக் கல்வி, உயர்பட்டக் கல்வி, பேரறிஞர் பட்டக் கல்வி, அத்தனையும் எட்டும் வகையில் கல்வி முறை அமையவேண்டும். கல்விக் சுடங்களும் பெருக வேண்டும், வாய்ப்புகள் வளர வேண்டும். வசதிகள் பெருக வேண்டும். கல்லார் யாருமில்லாத அந் நன்னிலையை நோக்கி நாம் dரைய வேண்டும். கல்வி அமைப்பு எப்படியிருக்கவேண்டும்? பள்ளியிறுதி வரை முழுநேரக் கல்வியாக இருக்க வேண்டும். எவரும் பதினைந்து அல்லது பதினறு வயது முடிவதற்கு முன், சம்பாதிப்பதைப் பற்றிச் சிந்தனை செய்யக்கூடாது. அத்தகைய சூழ்நிலை நாட்டில் உருவாக வேண்டும். இல்லை. அதை உருவாக்க வேண்டும். கல்லூரிப் படிப்பு முழு நேரப் படிப்பாக வேண் டியதில்லை. பகுதி நேரப் படிப்பாகலாம். எல் லோர்க்கும் இல்லாவிட்டாலும், பெரும்பாலோர்க் குப் பகுதி நேரப் படிப்பாகவே இருக்கவேண்டும். GT. erחr-9