பக்கம்:எல்லோரும் வாழ்வோம்.pdf/14

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

i é என்னும் அரசியல் தெளிவுபெற்ற வல்லவர்எஃகு மனிதர்-அஞ்சா நெஞ்சினர்-வல்லபாய் பட்டேலால் பெற்ருேம், இணைந்த இந்தியாவை. பழங்குலப் பெருமைபெருத ஒருவரால் விளைந்ததே இப் பெரு நன்மை. "பண்டை மகான்களால் செய்ய முடியாததைமன்னர் மன்னர்களால் செய்ய முடியாததை, தலைமைப் பதவியைக்கூடப் பெறமுடியாத நான செய்யக்கூடும்? இருக்கிற இந்தியா போதாதா? அங்கும் இங்கும் உறங்கிக் கொண்டிருக்கும் பரி களையும், நரிகளையும், சிறுத்தைகளையும், புலிகளையும் சண்டைக்கிழுப்பானேன்? என்று வல்லபாய் மலைத் திருந்தால், அஞ்சியிருந்தால், சும்மா இருந்திருந் தால் இணைந்த இந்தியாவைப் பெற்றிருக்க மாட் டோம். குடியாட்சி இந்தியா என்ற பெரும் பகுதியும் மன்னர் ஆட்சி வனங்கள் பலவும் நீடித் திருக்கும். அவ் வனங்களிலிருந்து, குடியாட்சி இந்தியாவிற்கு அடிக்கடி தொல்லைகள் விளைந் திருக்கும். - பண்டை மகான்களால் ஆகாதது, நேற்றைய மனிதரால் ஆயிற்று. மன்னர் மன்னர்கள் சாதிக்க முடியாததை சாதாரண குடிமகளுர் எஃகு மனிதர், நம் வல்லபாய் படேல் சாதித்துவிட்டார். அத்தகைய எஃகு மனிதராக, நீ இருக்கக் கூடாதா தம்பி? உதிர்ந்து, இறைந்து கிடக்கிற சமுதாயத்தை, ஒரே பாரத சமுதாயமாக்கும் வல்லபாயாக நீ வளரக்கூடாதா தம்பி? குடிசெய்வல் என்னும் ஒருவற்குத் தெய்வம் மடிதற்றுத் தான்முந் துறும் இது பொய்யா மொழியாயிற்றே தம்பி! சீட்டுக் கல்விக்கு இக் குறள் தேவைப்படாதிருக்கலாம்.