பக்கம்:எல்லோரும் வாழ்வோம்.pdf/22

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

24 ளுக்கு ஆள் கோப்புத்தாள்களைத் தள்ளி விடும் பணியோ பொய்மான். இதிலே கருத்தை இழக்காதீர். விளைவிக்கும் உழைப்பை-உணவை விளைவிக்கும் உழைப்பைப் போற்று. மேற்கொள். ஏன்? சேறு படிந்தாலும், சோறு போடும் தொழில் அது. உனக் கும் சோறு போட்டு, ஊருக்கும் சோறு போடும் தொழில் அது. அதைத் துாற்ருதே. அதில் ஈடு பட்டுள்ளவர்களை ஒதுக்காதே. அவர்களை இழிவு படுத்தாதே, மாருக, அதை மேற்கொள்; பகுதி நேரப் பணியாக மேற்கொள். மண்ணிலே பிறந்து, மண்ணிலே வாழ்ந்து, மண்ணிலே மறையப் போகும் நாம், மண்ளுேடு உறவாட வேண்டாவா? மண்ணைக் கிளறி உணவைப் பெருக்க வேண்டாவா? மண் படுமே என்று அஞ்சலாமா? சிந்தித்துப் பார் தம்பி! தங்காய்! வாழ்க்கைப் பொருள்களைச் செய்விக்கும் உழைப்பை மேற்கொள். நூற்கும் தொழில்ைத் துாற்ருதே. நெய்யும் தொழில்ை இகழாதே. அது மக்களின் மானங்காக்கும் தொழில். நல்லதும், சிறந்ததுமான அதைப் போற்று. உறைகளை உருவாக்குவோர் இழிந்தவரா? அத் தொழில் இழிந்ததா? செய்தவர் இழிவானவர், செய்தது இழிந்தது: என்ருல் நீ உறையும் வீடும் இழிந்ததன்ருே அதில் உறைபவரும் இழிந்தவர்தானே? முகங்கோனதே தம்பீ! உறையுளும் சிறந்தது. இழிந்ததல்ல. அதில் வாழும் நீயும் சிறந்தவன். அவ் வீட்டைக் கட்டிய கொத்தருைம் சிறந்தவர். இழிந்தவரல்லர். அவர் தொழிலும் சிறந்ததே.