பக்கம்:எல்லோரும் வாழ்வோம்.pdf/23

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

25 விடு கட்டும் தொழிலா இழிந்தது? இல்லை இல்லை. இப்படியே செய்தொழில் பலவும் சிறந்தவை. மண் பிரித்து பொன்னெடுக்கும் தொழில் மட்டுமா சிறந்தது ? காய்ச்சி உருக்கி இரும்பைத் தரும் தொழிலும் சிறந்ததே. கம்பியை வெட்டிக் காராக் கும் தொழிலும் அப்படியே! "உடலுழைப்பு இழிந்தது ; சூழ்ச்சிப் பிழைப்பு சிறந்தது என்னும் தவருன கருத்தைத் தள்ளிவிடு. சுரண்டும் பிழைப்பு யாருக்கு வேண்டும்? சுருட்டும் பிழைப்பு நமக்கேன்? உழவுக்கும், தொழிலுக்கும் வந்தனை செய் வோம். ஆக்குந் தொழில் பலவும் மேற்கொள் வோம். தேவைப் பொருள் பலவும் செய்து குவிப்போம்.