பக்கம்:எல்லோரும் வாழ்வோம்.pdf/24

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

உயிர் காக்கப் பயிர் காப்போம் என்னருமைத் தம்பி, தங்காய்! 'உடலுழைப்பு இழிந்தது' என்னும் தவருன கருத்தைத் தள்ளிவிட்டீர்களா? மகிழ்ச்சி. உழவுக் கும் தொழிலுக்கும் வந்தனை செய்ய முடிவுசெய்து விட்டீர்களா? பாராட்டுகிறேன்; வரவேற்கிறேன்; பின்பற்றுகிறேன். - - ஆக்குந் தொழில் பலவும் மேற்கொள்வோம் வாரீர். தேவைப் பொருள் பலவும் செய்து குவிப்போம். தேவைகள் பலப்பல. அவற்றிலே அடிப்படைத் தேவை எது? உணவே அடிப்படைத் தேவை. உணவின்றி வாழ்ந்த உயிருண்டோ? இல்லை. ஆதி மனிதன்-மர உரியை அணிந்தவனுக்கும் முந்திய மனிதன்-தழைகளைக் கோர்த்து உடுத்திக் கொள் வதற்கு முன், எதற்காகப் படாத பாடுபட்டான்? உடைக்கா? உறையுளுக்கா? இல்லை, இல்லை. பின் எதற்கு? உணவிற்கு. உயிர் வாழவைக்கும் உண விற்கு அவன் பட்டபாடு கொஞ்சமா? இயற்கை யாகக் கிடைக்கும் காய்கறிகளைப் பறித்து உண் டான். கிழங்குகளைத் தோண்டி உண்டான். உணவுத் தேவையைச் சமாளித்த பிறகே, ஆதி மக்கள் இனம், உடையைப் பற்றிச் சிந்திக்கத் தொடங்கிற்று. சரி. அதிலிருந்து நாம் கற்றுக் கொள்ளும் பாடம் என்ன? உணவுத் தேவையே முதல் தேவை. அதை முதலில் கவனிப்போம், அதில் தன்னிறைவு பெறுவோம் வாரீர்! 'எப்படி முடியும்? எத்தனை ஆண்டுகளாக உணவுப் பற்ருக்குறை இருக்கிறது? இந்த ஐயம் எழுந்து குழப்புகிறதா தம்பி! பொறு மன்மே, பொறு. மனமே பொறு. ஐயம் தெளிவோம். யாரிடம்