பக்கம்:எல்லோரும் வாழ்வோம்.pdf/25

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

27 கேட்டு? என்னிடம் கேட்டா? அல்ல. நிபுணர்களைக் கேட்டா? அல்ல. பின் யாரைக் கேட்டுத் தெளிவோம்? அறிவுக் கடலிடம் செல்வோம். மன்பதைக்கும் மறைதந்த சான்ருே.ரிடம் செல்வோம். பொய்யா மொழியாரிடம் செல்வோம். திருவள்ளுவரிடம் செல்வோம். இதோ தெளிவுரை. காலத்தாற் கறைபடாத அறிவுரை, வையகம் முழுவதற்கும் பொருந்தும் வாய்மை. கேளிர் உடன் பிறந்தோரே ! இலம் என்று அசைஇ இருப்பாரைக் காணின் நிலம் என்னும் நல்லாள் நகும் , ஆறுதல் உரையல்ல இது. வெறும் ஊக்க உரை அல்ல இது. மயக்க உரையல்ல இது. மெய்யுரை இது, எக்காலும் மெய்யுரை இது. இதை ஏற்போம் வாரீர். இதைப் பின்பற்றுவோம் வாரீர். இல்லையே! உனவில்லையே’ என்று ஏங்கு கிறது மக்கள் இனம். அந்த ஏக்கத்திலே சோர்ந்து கிடக்கிறது மக்கள் இனம். இதைக் காண்கிருள் நல்லாள்: எந்த நல்லாள்? நிலமென்னும் நல்லாள். அவள் தாயினும் தயையுடைய நல்லாள் அன்ருே? அத்தயையிலைன்ருே, அகழ்வாரையும் பொறுத்துத் தாங்கி நிற்கிருள். அந் நல்லாள் நம் ஏக்கத்தைக் கண்டு ஏங்குவாளா? அலறி அழுவாளா? துடித்துத் துவளுவாளா? அவள் ஏன் ஏங்கவேண்டும்? அவள் ஏன் அழவேண்டும்? அவள் ஏன் துவளவேண்டும்? அவளுக்குத் தெரியுமே நம் அறியாமை. எத்தனை, எத்தனை வேண்டுமானுலும் விளைவித்துத்தர நிலத் தாய் உள்ளாள் என்பது நமக்குத் தெரியாது. அவளுக்குத் தெரியும். பாலை என்று மலைக்கிருேம் நாம். சோலையாகக் காத்திருக்கும் நிலம் அது என்பதை அவள் அறிவாள். எனவே, ஏங்காது.