பக்கம்:எல்லோரும் வாழ்வோம்.pdf/26

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

28 அழாது, துடிக்காது நம்மைக்கண்டு நகைக்கிருள். வாயுரையிலும் சிறந்த குறிப்புரையால் உணர்த்து கிருள். எதை உணர்த்துகிருள்? உணவு விளையும்; வேண்டிய மட்டும் விளையும்; நெடுங்காலம் விளையும்; இதை முடித்துத் தரவல்லவா நான் காத்திருக் கிறேன். உன் சிறுமையையெல்லாம் பொறுத்துக் கொண்டிருக்கிறேன். முடங்கிக் கிடக்காதே. எழுந் திரு. சோம்பலை உதறித் தள்ளு என்னிடத்திலே வா. என்ைேடு பாடுபடு. என்னிடத்தில் உள்ள தனத்தும் எனக்கே அல்ல. உங்கள் அனைவருக்குமே என்று உலகப் பொதுமொழியாம் குறிமொழியால், நகைமொழியால் வழிகாட்டுகிருள் நிலத்தாய். அவ் வழியை உணர்ந்தீர்களா? நல்லது; பின் பற்றுவோம் வாரீர், உடன் பிறந்தோரே. பயிர் செய்வோம். பகுதிநேரப் பணியாகவேனும் பயிர் செய்வோம். ஆண்டு முழுவதும் செய்யக் கூடு மானுல் நன்று. இல்லையேல் என்றுமே சும்மா இருக்கலாமா? ஆகாது: ஆகாது தம்பீ. மழைப் பருவத் திலாவது பயிர் செய்வோம். கரும்பும் செந்நெல்லும் பயிரிடுவது மட்டுமே பயிர் என்று நினைக்காதீர். வாழையும் தென்னையும் பயிரிட முடிந்தால்தான், பயிர் செய்ய முன்வரவேண்டுமென்று எண்ணுதிர். இரண்டொரு திங்கள் மட்டுமே பயிரிடக்கூடிய காய்கறித் தோட்ட வேலையும் செய்யவேண்டிய வேலையே. நாட்டின் உணவுத் தன்னிறைவிற்கு உதவும். வேலையே கீரைப் பாத்தியும். உயிரைக் காக்கும் இதை உணர்வோம். சின்னஞ்சிறு நிலம் இருப்பின், அதிலும் பயிரிடுவோம். விளையக்கூடிய ஏதாவ தொரு உண்பண்டத்தை விளைவிப்போம். நீர்வள முடைய திங்கள்களிலாவது பயிரிடுவோம்.