பக்கம்:எல்லோரும் வாழ்வோம்.pdf/27

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

29 நாற்பது ஐம்பது ஆண்டுகளுக்குமுன் நம் சிற்றுார்கள் இருந்த நிலை தெரியுமா? இளைஞர் களாகிய உங்களுக்குத் தெரியாதது வியப்பல்ல. எனவே என் பட்டறிவை உங்களோடு பகிர்ந்து கொள்கிறேன். அன்று எல்லாச் சிற்றுரர்களிலும், எல்லாப் புறக்கடைகளிலும், பச்சைக் கொடிகள் படர்ந் திருக்கும், பூத்துக் காய்த்திருக்கும். கொடிகள் மட்டுமா? இல்லை. செடிகளும் பசுமையாக வளர்ந் திருக்கும்; பூத்திருக்கும்;காய்த்திருக்கும். இப் பசுமை நிலை இங்கும் அங்கும் மட்டுமா? இல்லை. இங்கொரு வீட்டிலும் அங்கொரு வீட்டிலுமா? இல்லை, இல்லை. எல்லா வீடுகளிலும் இதே நிலை. எல்லாக் குடிசைகளையடுத்தும் இதே நிலை. பெருநிலக்கிழார் பெரியசாமியின் வீட்டுப் புறக்கடையில், காய்கறித் தோட்டம் செழித்திருக்கும். வாய்க்கால்கரை வரதனின் குடிசையின் பின்னல் சின்னஞ்சிறு குழியிலே முளைத்து, அவர் குடிசை மேலேறிப் படர்ந்து, பூத்துக் காய்க்கும் பூசனிக் கொடி செழித்திருக்கும். இடைநிலையிலே உள்ளவர்கள் வீடுதோறும் இப்படியே. பச்சைக் காய்கறிகள், சாந்தக் காய்கறிகள், கீரை வகைகள். எனவே உள்ளுர் காய்கறித் தேவைகள் அனைத்தையும், உள் ளூரிலேயே பெற்று வந்தார்கள் அக் காலச் சிற்றுார் மக்கள். பச்சையாக உண்டு உரம் பெற்று வந்தார் கள். இத் தன்னிறைவே, சிற்றுார் தன்னிறைவே, காய்கறித் தன்னிறைவே நம் முன்னேர்களை வறு மைக் கொடுமையிலிருந்து காப்பாற்றியது. இன்றைய சிற்றுார்களின் நிலை என்ன? எத்தனைச் சிற்றுார்களில், வீட்டிற்குவீடு காய்கறித் தோட்டம் உண்டு? எத்தனைச் சிற்றுார்களில், குடிசைக்குக் குடிசை படரும் பச்சைக் கொடிகளைக்