பக்கம்:எல்லோரும் வாழ்வோம்.pdf/28

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

3ύ காணமுடியும்? பல ஊர்களில், பல வீட்டுப் புறக் கடைகளெல்லாம் கரம்பாக அல்லவா காட்சியளிக் கின்றன? குடிசைகள் நிலையாவது தாங்கும் நிலையில் உள்ளதா? குடிசைகள் மீதும் படரும் கொடி களுக்குப் பதில் பறக்கும் கொடிகளன்ருே நம்மை ஈர்க்கின்றன? கவனம் எல்லாம் கொடிகளைப் பறக்க விடுவதிலேயே திருப்பிவிடலாமா? வகை வகையான கொடிகளை உருவாக்கிப் பறக்க விடுவதிலேயே முழு முயற்சியும் திரும்பிவிடலாமா? படரும் கொடிகளை மறந்து, பறக்கும் கொடிகளையே நினைத்துக் கொண் டிருந்தால், நாமும் ஆலாய்ப் பறக்கத்தானே வேண்டும்? தொடர வேண்டாம், கவனமாற்றம். திருப்புங்கள் உங்கள் சிந்தனையை. மாற்றுங்கள் உங்கள் முயற்சியை எண்ணுங்கள் பண்டைச் சிற்றுார்களை. பின்பற்றுங்கள் அக் கால மக்களை. வீட்டிலும் விடுதியிலும் பயிரிடுங்கள். கல்லூரித் தோட்டத்திலும் பயிரிடுங்கள். கிடைத்த இட மெல்லாம் கிளறி விதையுங்கள். தேர்ந்தெடுத்து விதையுங்கள். பருவத்துக்கேற்ற பயிரை வளருங் கள். காத்து வளருங்கள். பயிரிட்டு உண்ணுங்கள். முடிந்த சிறுஅளவாவது உங்கள் உணவுப் பொருளை உங்கள் உழைப்பாலே பயிரிட்டு வாழுங்கள். தன் னிறைவுக்குத் துணைசெய்யுங்கள். தனி ஆள் தன் னிறைவுக்குத் துணைசெய்யுங்கள். தனி ஆள் தன் னிறைவும், நாட்டுத் தன்னிறைவும் விரைவில் கைகூட உங்கள் பங்கு எங்கே?