பக்கம்:எல்லோரும் வாழ்வோம்.pdf/29

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

தருமம் மறுபடி வெல்லும் என்னருமைத் தம்பி, தங்காய்! ஒன்றை நினைப்போம், அது ஒழிந்திடும். நினை யாத ஒன்ருே, தானே வந்து நிற்கும். தீயதே வந்து நிற்கும் என்பதல்ல, தீயதுபோல் நல்லதும் வந்து நிற்கும். இதுவே வாழ்க்கை. அண்மையில் இப்படி நடந்தது எனக்கும். பஞ்சாப் மாநிலத்தின் தலைநகரம் சந்திகார். அந்த நகரில், 1965 அக்டோபர் 28, 29 தேதிகளில் மத்தியக் கல்வி ஆலோசனைக் குழுவின் ஆண்டுக் கூட்டம் நடந்தது. அக் கூட்டத்திற்குச் செல்ல எனக்கு ஆணே வந்தது. சென்னையிலிருந்து சந்தி கார் வரை இரயிலில் செல்லத் திட்டமிட்டேன். அப்படியே புறப்பட்டேன்; ஜான்ஸியில் நின்று விட்டது அந்த இரயில். காரணம்? வழியில் சாமான் இரயில் கவிழ்ந்து விட்டதாம். எனவே, மேற்கொண்டு செல்லமுடியாத நிலை. மணிக் கணக்காக எங்கள் இரயில் காத்திருந்தது. பின்னர் வழிபிறந்தது. நேர் வழியல்ல-சுற்றுவழி. கான்பூர் வழியாக டெல்லிக்குச் சென்றது எங்கள்வண்டி. இதல்ை ஏற்பட்டது காலதாமதம். நான் டெல்லியிலிருந்து சந்திகார் செல்ல ஏற்பாடாகியிருந்த இரயில் சென்றுவிட்டது. விளைவு? பஸ் பயணம். கூடிய விரைவில், சந்திகார் கட் டத்திற் கலந்துகொள்ள வேண்டுமென்ற அவா உந்திற்று. ஆகவே பேருந்து வண்டியேறி, சந்தி காருக்கு விரைந்தேன். இதனால் பட்டப்பகலில், பாஞ்சால நாட்டின் வழியாகச் செல்லும் வாய்ப்புக் கிட்டிற்று. நெடுந்துாரம் நாட்டையும் மக்களையும் கவனிக்க முடிந்தது. இப் பட்டறிவு பயனுள்ள தாக இருந்தது. பலப்பல நினைவுகளை விளைவித்தது. தோ அவ் விளைவு அள்ளிக் கொள்ளுங்கள்.