பக்கம்:எல்லோரும் வாழ்வோம்.pdf/30

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

3.2 பாஞ்சால நாட்டின் வளத்தைக் கண்ணுரக் கண்டேன். அவ் வளம் இன்றுதான் பிறந்ததா? இல்லை. நேற்று வந்ததா? இல்லை. தொன்றுதொட்டு வருகிறது அது. ஏறி இறங்கி வருவது; இங்கல் லவா வெகுகாலத்திற்கு முன், ஹரப்பா நகரை அமைத்து, நாகரிகத்தின் முதிர்ந்த நிலையை உல கிற்கு உணர்த்தினர் நம் முன்னேர். என் நினைவு ஹரப்பாவிற்குத் தாவிற்று. அதன் தொன்ம்ை யைக் கருதினேன். பெருமையை எண்ணினேன். சிறப்பைச் சிந்தித்தேன். நம் நாடு, பழம்பெரும் நாடு என்பதை உணர்ந்தேன். நீர் இதன் புதல்வர். இந் நினைவகற் ருதீர்' என்று விடுதலைக் கவிஞர் பார்தி, என் எதிரில் நின்று உரைப்பதுபோல் தோன்றிற்று. மொகஞ்சதராவை இழந்ததுபோல, ஹரப்பாவை இழக்கலாமோ என்று தமிழ் ஆய்ந்த இந்தியரெல் லாம் இடி முழக்கம் செய்வதுபோல் தோன்றிற்று. மனித நாகரிகத் தொட்டில்களில் ஒன்ருன இப் பாரதத் தொட்டிலில் எத்தனை எத்தனை வீரர் கள் வளர்ந்தார்கள்! எத்தனை எத்தனை விவேகிகள் வளர்ந்தார்கள்! வளர்ந்து சிறந்த சான்ருேர்க்குக் குறைவுண்டா? உழைத்து, வளம் படுத்திய உழைப்பாளர் சிலரா? ஹரப்பாவின் சிறப்பிலிருந்து குருக்ஷேத்திரத் திற்குப் பாய்ந்து என் நினைவு. ஏன்? குருக்ஷேத் திரம் பாஞ்சாலத்தில் உள்ள இடமும், பாண்டவ்ர் பட்டபாடும், ஆண்ட நூற்றவர் அதிகார மமதை யில் செய்த அடாத மானபங்கமும் மின்னின என் அறிவில். ஆணேகேட்டுக் கொதித்த பீமனைக் கண்டேன். அமைதியின் திருவுருவாம் தருமனையும் கண்டேன். -