பக்கம்:எல்லோரும் வாழ்வோம்.pdf/31

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

33 'தருமத்தின் வாழ்வதனைச் சூது கவ்வும் தருமம் மறுபடி வெல்லும்' என்னும் இயற்கை மருமத்தை நம்மாலே உலகம் கற்கும் வழிதேடி வகையீந்த விதி செய்தான். இன்று கட்டுண்டோம் பொறுத்திருப்போம். காலம் மாறும் என்ற அமைதி யுரை, நம்பிக்கையுரை நினைவிற்கு வந்தது. இவ்வியற்கை மருமத்தைப் பாண்டவரால் மட்டுமா உலகம் கற்றது. ஒவ்வொருவர் வாழ்விலும் 'தருமத்தைச் சூது கவ்வ’க் காண்பதில்லையா நாம்? அறத்தின் வெற்றியிலே அசையாத நம்பிக்கையும் அதல்ை பெறும் பொறுமையும் முடிவில் சூதினை வெல்வதைப் பலமுறை காண்பதில்லையா? பலரது நிலையிலே காண்பதில்லையா? இப்படி ஒடிற்று என் நினைவுச் சிற்றருவி. இன்றைய இந்தியாவின் நிலைக்கு வந்தது நினைவு. பாகிஸ்தானிடம் பொறுமை காட்டினுேம். நெடுங்காலம் - நீ தி ைய எடுத்துரைத்தோம்; நேர்மையைச் சுட்டிக் காட்டினேம். நேசக் கரம் நீட்டினேம். அந் நாடு, உரிமையின்றி, உடைமை கொண்ட நம் பகுதியைத் திருப்பிப் பெற வாதிட் டோம். ஆயினும் வாள் எடுத்தோம் இல்லை. பொறுமையினைப் புரிந்துகொள்ளும் திறமையில்லை பாகிஸ்தானுக்கு. சாதுக்களைக் கோழைகளாகக் கருதிவிட்டது பாகிஸ்தான்; போர் தொடுத்தது. அப்புறம் ? இத் தலைமுறையின் தருமராக, சாந்தமூர்த்தி யாக விளங்கும் நம் பிரதமரும்-லால்பகதூரும்பண்டைய தருமர் நிலைக்கு ஆளானர். போர் மூண்டது. மக்கள் திரண்டு நின்றனர். ஒன்றுபட்டு நின்றனர். உறுதியோடு நின்றனர். வெற்றி கான முனைந்து நின்றனர். GT. GurT — 3