பக்கம்:எல்லோரும் வாழ்வோம்.pdf/32

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

34 படுகளத்தில் ஒப்பாரி ஏது? கீதைவழியைப் பின்பற்றினர் நம் போர்வீரர். வேறு பற்றுகளை மறந்து நாட்டுப்பற்றையே முன்னிறுத்தி நாட்டின் உரிமையையே உளத்திற்கொண்டு, நீதியையே நினைத்து, வீரத்தோடு மட்டுமின்றி விவேகத் தோடும் கடும்போர் புரிந்தனர் நம் வீர மரபினர். கூற்றுடன்று மேல்வரினும் கூடிஎதிர் நிற்கும் ஆற்ற லதுவே படை. இது படைக்கு இலக்கணம் கூறும் திருக்குறள்: பொதுமறை. இவ்விலக்கணத்திற்கு இலக்கியமாக விளங்கினர் நம் பாரதப் போர்வீரர்கள். வெள்ளம் போல வந்தனர் பாகிஸ்தானியர். எண்ணிக்கையில் ஒன்றுக்கு நான்காக வந்தனர் பகைவர். வந்த எதிரிக் கருவிகளும் அதே விழுக்காடு, ஆயினும் என்? மலைத்தார்களா நம்மவர்? இல்லை, திகைத் தார்களா நம்மவர்? இல்லை. சளைத்தார்களா நம்மவர்? இல்லை, இல்லை. வீரத்தோடு விவேகத் தையும் வாழையடி வாழையாகப் பெற்றவர்கள் அல்லவா நம்மவர்! எனவே மலைக்காமல், சளைக் காமல் கூடி, எதிர்நின்று போரிட்டனர். துணிந்து தாக்கினர். விரைந்து முன்னேறினர். வெற்றிமேல் வெற்றியும் பெற்றன்ர். எல்லாப் போர்முனைகளிலும் வெற்றி கொண்டனர். டாங்குகள் கொண்ட களிப்போடு- பலப்பல டாங்குகள் கொண்ட போதையோடு-நுழைந்தனர் பாகிஸ்தானியர். வந்த போரோ, உரிமைப்போர், அறப்போர், தன்மானப்போர், தற்காப்புப்போர் என்ற தெளிவோடு, ஒன்றுகூடி எதிர்த்து நின்றனர் நம் படைவீரர். முறுக்குகளை நொறுக்குவதுபோல டாங்குகளை நொறுக்கித் தள்ளினர். மண்ணுேடு நின்ருர்களா? விண்ணையும் விடவில்லை நம் வீரர் கள். காற்றிலேறி விண்ணிலே சாடினர்.