பக்கம்:எல்லோரும் வாழ்வோம்.pdf/33

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

35 எவற்றை? பகைவரின் விமானங்களை. எத்தகைய விமானங்களை? சின்னஞ்சிறியனவற்றையா? இல்லை. வல்லரசால் செய்யப்பட்ட வலிமைமிக்க விமா னங்கள் என்று விளம்பரப்படுத்தப்பட்ட பெரும் விமானங்களை. பகைவரின் விமானக் கோட்டை களைத் தகர்த்தெறிய, நம் வீரர் எத்தகைய விமானங் களைப் பயன்படுத்தினர்? சின்னஞ்சிறு விமானங் களைப் பயன்படுத்தினர். சொந்த விமானங்களைப் பயன்படுத்தினர். பிச்சை கேட்டுப் பெற்ற அன்னிய விமானங்களையல்ல, நம் உழைப்பால், நாம் சிந்திய வியர்வையால் பெங்களுரில் உருவான சொந்த இந்திய விமானங்களைக்கொண்டு பகைவனின் கொட்டத்தை அடக்கினர். தொடர்ந்து அனுப்ப விமானமில்லை பாகிஸ்தானியரிடம் என்ற நிலைக்குத் தள்ளினர். பட்ட உதை, பகைவரின் போதையைப் போக்கிற்று. சிறு தெளிவைக் கொணர்ந்தது. போர் நிறுத்த வாக்கை வரவழைத்தது. அறத் திற்குக் கட்டுப்பட்ட நாம், அவ்வாக்கிற்குக் கட்டுப் பட்டோம். ஆனால், பகைவனே, அறம் இதென்றும், மறம் இதென்றும் அறியாதவன். எனவே உதை யினல் ஏற்பட்டபோதை நீக்கம் தற்காலிகமானதாகி விட்டது. உதை நின்றதும் போதை மீள்கிறது. சுடுதல் தொடர்கிறது. இருப்பினும் என்? நிலைமை மிஞ்சுகையில் நீராக்கவன்ருே பொறுமை காத் தோம், காக்கிருேம்.