பக்கம்:எல்லோரும் வாழ்வோம்.pdf/34

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

வீரத்தின் விளைநிலம் என்னருமைத் தம்பி, தங்காய்! ஹாரப்பா காலத்திலிருந்து குருக்ஷேத்திர காலத்தின் வழியாக, நேரே நம் காலத்தின் மேல் பறந்து பாரதியாரின் வீர முழக்கத்தை முழங்கிக் கொண்டிருந்த என் நினைவு, இந்திய விடுதலைப் போரின்மேல் சென்றது. வாழ்ந்து சிறந்த சமுதாயம் நாம் என்பதை மறந்து, தாம் என்கிற முனைப்பு ஒன்றையே குறிக் கோளாகக் கொண்டிருந்த இந்திய மன்னர்களின் ஒற்றுமைக் குறைவாலும், போட்டிகளாலும், காலை வாரிவிடும் முயற்சிகளாலும், காட்டிக் கொடுக்கும் குணத்தாலும், அன்னியராம். ஆங்கிலேயருக்கு அடிமைப்பட்டு, சிறப்பெல்லாம் இழந்து பிழைப் பிற்கே பல்லிளிக்கும் நிலைக்கு வீழ்ந்து அவலமுற்று நின்றது நம் பாரதம். ஒராயிரம் ஆண்டு ஒய்ந்து கிடந்தபின், வாராமல் வந்த மாமணியாம் மகாத்மா காந்தி யடிகளின் தலைமையில் நடந்த அறப்போர், விடு தலைப் போர்-விரிந்து நின்றது. அண்ணல் காந்தி யடிகளின் ஆணைவழி, இதந்தரு மனையினிங்கி இடர்மிகு சிறைப்பட்ட நல்லோர், நூலோர், தொண்டர்தம் பேரணியின் பெருநடையை அகக் கண் கண்டு மகிழ்ந்தது. m அவர்கள் பட்டபாடு கொஞ்சமா? செய்த தியாகங்கள் சிலவா? திருப்பூர் குமரனது உயிர்த் தியாகம் மின்னிற்று. செம்மல் சிதம்பரனர் செக்கிழுத்த கொடுமை நெஞ்சை வாட்டிற்று. கோமகனக வாழ்ந்த நேரு போன்ற தலைவர்கள், பல்லாண்டு வெஞ்சிறையில் அடைபட்டுக் கிடந்தநிலை கருத்தைக் கலக்கிற்று.