பக்கம்:எல்லோரும் வாழ்வோம்.pdf/36

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

3 & பரிமாறுபவர் வந்தார். என்ன வேண்டுமென் ფrf. 'காபி மட்டுமே.”* என்றேன். உடன் இருந் தவர் கட்டளையும் அதே காபி வந்தது. சுவைத் துக் குடித்துக்கொண்டே, கடை முழுவதையும் ஒரு முறை கண்ணுல் அளந்தேன். மேனுட்டுக் கடை களின் உயர்ந்த நிலையில் அக் காப்பிக் கடையும் இருப்பதை உணர்ந்தேன். போர் நெருக்கடி யிலும் இவ்வளவு பகட்டான காப்பிக்கடையா என்று எழுந்தது ஐயம். அந்நேரம் பார்த்து என் சிந்தனையைக் கலைத்தார் கேப்டன். கையிலிருந்த செய்தித்தாள் ஒன்றைக் காட்டி, 'பலே, எவ்வளவு தாராளமாகக் கொடுத்திருக் கிருர்கள் பாருங்கள். நாட்டுப் பாதுகாப்பு நிதிக்கு, நன்கொடை தாருங்கள் என்று வேண்டுகோள் விடுத்தார்கள் தலைவர்கள். பாஞ்சால மக்களிடம் அவர்கள் எதிர்பார்த்தது சில இலட்சங்களே. உடலையும் ஆவியையும் தாராளமாக நாட்டுக்கு வழங்கியுள்ள பஞ்சாபியரிடம் குறைந்த பொருளே எதிர்பார்த்தார்கள் போலும். ஆனால், மக்களோ பொருட் கொடையிலும் தாராளமாக உள்ளனர்; இதற்குள்ளேயே, பணமாகவே இரண்டு கோடி ரூபாய்கள் நன்கொடை வழங்கிவிட்டனரே ! மேலும் மேலும் வழங்கத் தயங்கிார்' என்று பெரு மிதத்தோடு கூறினர் அப் பஞ்சாபியக் கேப்டன். "இங்கும் அங்குமுள்ள, வெளிச்சம் போடும் காப்பிக்கடைகளில் நிறைந்துள்ளவர்களைக் கண்டு மதிப்பிடக்கூடாது இம் ம க் களை. நாட்டின் நெருக்கடியை உணர்ந்துள்ளனர் பஞ்சாபியர். அதற் கான தியாகத்தில் மூழ்கியுள்ளனர். இம் மக்கள் என்பதை விளக்கிற்று இச் செய்தி. உடல், பொருள், ஆவி மூன்றையுமே-வெறும் வழக்காக மட்டுமின்றி-மெய்யாகவே தாராளமாக